ரொஹிங்கியர்களுக்கு மலேசியா அனுமதி

ரொஹிங்கிய முஸ்லிம்களை ஏற்றிவந்த படகு ஒன்று லங்காவி தீவுக்கு அப்பால் மலேசியாவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதில் உள்ளவர்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என மலேசியக் கடலோரக் காவல்படைத் தலைவர் ஸுல்கிப்லி அபு பக்கர் தெரிவித்தார்.

56 அகதிகளை ஏற்றிவந்த படகு, கடந்த சனிக்கிழமை வீசிய புயல் காரணமாக, தென்புறத் தாய்லந்துத் தீவு ஒன்றில் கரையொதுங்கியது. அப்போது அந்த அகதிகள் மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தாய்லந்து அதிகாரிகள் கூறியிருந்தனர்.

மனிதாபிமான அடிப்படையில் அந்த அகதிகள் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என மலேசியா குறிப்பிட்டது. அந்த அகதிகள், குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


Add new comment

Or log in with...