கைதான SDIG லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை (UPDATE)

 
கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு, ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

வாக்குமூலம் வழங்க வந்த SDIG லலித் ஜயசிங்க கைது (UPDATE) (மு.ப. 11.07)

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
 
2015 இல் கஹவத்தையில் இடம்பெற்ற கொலை தொடர்பிலான விசாரணையின் பொருட்டு, பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் (SIU) ஆஜராகியிருந்த வேளையிலேயெ அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

சாட்சியங்களை மறைத்தார்; லலித் ஜயசிங்கவிடம் விசாரணை (மு.ப. 10.03)

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் (SIU) ஆஜராகியுள்ளார்.
 
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேளையில், ஜனவரி 05 ஆம் திகதி கஹவத்தை பகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் பிரமலால் ஜயசேகர உள்ளிட்ட குழுவினரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒரு சில விடயங்களை மறைத்தமை தொடர்பில், லலித் ஜயசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...