புத் 66 இல. 10

விஜய வருடம் மாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஜ. ஊலா பிறை 07

SUNDAY MARCH 09 2014

 

 

ஜனீவாவில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது

உண்மை நிலையை உணர்ந்துகொண்டு அறிக்கை விட்டுள்ளனர் கலைஞர், சுரேஸ், மனோ

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கை தொடர்பாகச் சில நாடுகளும், உள்ளூர் மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், சனல் 4 உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங் கள் சிலவும் முன்னெ டுத்து வந்த பொய்ப் பிரசாரங்கள் படுதோல் வியில் முடிவுற்றுள்ளன.  தம்மால் முன் வைக்கப்பட்ட சோடிக்கப்பட்ட ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுக்கள் மூலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச போர்க் குற்றச்சாட்டு விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடும் எனவும் இலங்கை மீது பொருளாதாரக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் எனவும் சில நாடுகளும், அரசியல் வாதிகளும் எதிர்பார்த் திருந்தனர். ஆனால் அவை அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளன.

                                                            விவரம்»

 

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எச்.மன்ஸில் மற்றும் களுத்துறையில் போட்டியிடும் எம்.எம்.எம். அம்ஜாத் ஆகியோரை ஆதரித்து கொழும்பு கிராண்ட்பாஸிலும், தர்காநகரிலும் இடம்பெற்ற இருவேறு பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ எம்.பி. வேட்பாளர்களினால் வரவேற்கப்படுவதை படங்களில் காணலாம். (படங்கள்: இர்ஷாத் பி.எம். முக்தார்)

சர்வதேச போர்க் குற்ற விசாரணை கோரிக்கை:

தானும் முன்வைக்கவில்லை என்னையும் பேச விடவில்லை

சுமந்திரன் எம். பி. யுடன் அனந்தி முறுகல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப் பப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப் பினர் சுமந்திரன் எந்த வொரு சந்திப் பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர் பில் கோரிக்கை களை முன்வைக்க வில்லை. என்னை யும் எதுவும் பேச அனுமதிக்க வில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள் ளார்.ஜெனீவா சென்று . . .

விவரம் »

மலேசிய பயணிகள் விமானம் வியட்நாம் வான்பரப்பில் மாயம்

239 பேருடன் கடலில் வீழ்ந்திருக்கலாமென அச்சம்: உறவினர்கள் கதறியழுகை

239 பேருடன் காணாமல் போன மலேசிய விமானம், வியட்நாமின் தோ சு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை வியட்நாம் கடற்படை அதிகாரி ஒருவர் அரச செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வியட்நாம் கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் இல்லாததால், அருகில் உள்ள தீவுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காக படகுகளை கொண்டு வர உத்தரவிட்டுள் ளதாகவும் தெரிவித்தார்.

                                                            விவரம்»

சுயலாப நோக்கில் பொதுநலனுக்கு முட்டுக்கட்டை;

மு. கா. வில் இருப்பதில் அர்த்தமில்லை கட்சியிலிருந்து விலக சிராஸ் முடிவு

கல்முனை முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீரா சாஹிப் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். மு.கா.வின் உயர்பீட உறுப்பினரான சிராஸ் மீராசாஹிப் கடந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் மு. கா. சார்பாகப் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மேயரானார். சரியாக 2 வருடமும் ஒருமாதமும் மேயராகப் பதவி வகித்த....

                                                           விவரம் »

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.