Tuesday, April 23, 2024
Home » 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு

05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு

- புத்தாண்டுக்குப் பின்னர் நாளை முதல் முறையாக கூடவுள்ள நாடாளுமன்றம்

by Prashahini
April 23, 2024 2:20 pm 0 comment

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை (24) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதி என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் நாளை (24) முதல் முறையாக கூடவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் (25) மற்றும் வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் விஷம், அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை, புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையும் நாளை கூடவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு நீதி அமைச்சினால் இரண்டு புதிய அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டங்களை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT