புத் 63 இல. 51

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 12

SUNDAY DECEMBER 19,  2010

 
.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அண்மைக்கால வளர்ச்சிகள்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அண்மைக்கால வளர்ச்சிகள்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது இன்று உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய அளவில் வியாபித்து காணப்படுகின்றது. இதன் வளர்ச்சி அண்மைக் காலங்களில் பாரிய அபிவிருத்திகளை கண்டு வருகின்றன.

இவற்றில் பெளதீக ஊடகம் என்பது ஆரம்பத்தில் முக்கிய இடத்தை வகித்தது. இந்நிலையில் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நவீன தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியின் ஒரு அங்கமாக அலைவரிசை ஊடகம் (ரேடியேட்டட் மீடியா) தற்பொழுது, அதிமுக்கியத்துவம் பெறுகின்றது என்றால் அது மிகையாகாது.

இன்றைய காலகட்டத்தில் பெளதீக ஊடகத்தையும் பார்க்க கம்பித்தொடர்புகள் அற்ற அலைவரிசை ஊடகத்தின் பயன்பாடு மிகவும் முன்னிலை வகிக்கின்றது.

01. வயர்லஸ் தொழில்நுட்பம் (Wireless Technology)

கம்பித் தொடர்பில்லாமல் (டேட்டா) தரவுகளை ஒரு இலத்திரனியல் ஊடகத்திலிருந்து (கணனி, கையடக்கத் தொலைபேசி) இன்னோர் ஊடகத்திற்கு தரவுகளை பரிமாறிக் கொள்வதை குறிக்கும்.

இது அலைவரிசை ஊடகமாக காணப்படுகின்றன போது தொலைத் தொடர்பாடல் துறைக்கு பாரிய சேவையாகக் கருதப்படுகின்றது.

இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் மேலும் வேகமாக வளர்ந்து வருகிறன்மை பின்வரும் விடயங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கையடக்கத் தொலைபேசி, பேஜர், ஜி.எஸ்.பி., கோட்லஸ் மெளஸ், கீபோர்ட், பிரின்டர்ஸ், விசிஆர் கொன்ட்ரோல், தொலைக்காட்சி செனல் கொன்ட்ரோல், செய்மதி தொலைக்காட்சி, Remote Garage door operators, வயர்லஸ் LAN (லோக்கல் ஏரியா நெட்வேர்க்)

02. மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் (3G Technology)

மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமானது 1998களில் உருவாக்கப்பட்டது. தகவல் தொடர்பாடல் துறையில் இது ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது.

கம்பித் தொடர்பில்லாமல் அதிவேக இணையத்தை விசேடமாக கையடக்கத் தொலைபேசியாளர்களுக்கு வழங்குகின்றது.

3ஜி தொழில்நுட்பம் அறிமுகமாவதற்கு முன்னர் 1 ஜி தொழில்நுட்பம் 1980களிலும் 2 ஜி தொழில்நுட்பம் 1990களிலும் உருவாக்கப்பட்டது.

இவற்றில் 1 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் குரல் ஒலியை மாத்திரமும் 2 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் குறுச் செய்தி (எஸ்.எம்.எஸ்), சி.எல்.ஐ. வசதிகளும் உள்வாங்கப்பட்ட நிலையில் 3ஜி தொழில்நுட்பமானது மேலும் வளர்ச்சி அடைந்து “மொபைல் புரோட்பேன்ட் நெட்வேர்க்கை” உள்வாங்கிக் கொண்டது.

3G- Partnership project

3ஜி பங்குடமை திட்டமானது பின்வரும் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

GPRS (General Packet Radio Servise) இன் வேகம் 114 Kbps
EDGE (Enhanced Data Rates For Global Evalution) வேகம் 384 Kbps

WCDMA (UTMS wideband CDMA) வேகம் 1.92 Mbps
HSDPA (High Speed Downlink Packet Access)  வேகம் 14 Mbps E-UTRA (LTE Evolved UMTS Terretrial Radio Acces) இத் தொழில்நுட்பத்தின் மூலம் 100 Mbps வேகம் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது 4ஜி தொழில்நுட்பமானது வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

03. Wi - Fi

“வயர்லஸ் பிடலிடி” என்ற தொழில்நுட்பத்தை தான் Wi-Fi என்று அழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வேர்க்குகளில் ஒரு சில வகைகளாக காணப்படுகின்றது.

தரவுகளை கம்பிவழித் தொழில்நுட்பத்திற்கு பதிலாக கம்பிகளற்ற முறையில் ஏற்படுத்தப்படும் இணைப்புத் தொழில்நுட்பமான இது தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது.

முறையாக பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில் Wi-Fi வலைப்பின்னலை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாச வேலைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்பொழுது எழுந்துள்ள அச்சமாகும்.

வோல்கி டோல்கியின் அடிப்படை தன்மையைக் கொண்ட இதன் சேவையானது வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் மாத்திரம் வழங்கக் கூடியது. ஒரு “சிங்கல் எக்சஸ் பொயின்ட்” மூலம் 100-150 அடிக்குட்பட்ட 30 பாவனையாளர் பாவிக்கக் கூடியதாகக் காணப்படுகிறது.

4. ப்ளுடூத் பரிமாற்றம் (Blue Tooth Transmission)

கணனி, கையடக்கத் தொலைபேசி போன்ற மின்னியல் சாதனங்களுக்கிடையே கம்பித் தொடர்பில்லாமல் குறிப்பிட்ட, இடப்பரப்பிற்குள் தரவுகளை பரிமாறிக் கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகக் காணப்படுகிறது.

இது 1994ம் ஆண்டு “டெனிஷ் விகிங் கிங்ஹரல்ட்” என்பவரால் உருவாக்கப்பட்டு அவரது புனைப் பெயரான “ப்ளுடூத்” என்ற பெயர் இதற்கு வைக்கப்பட்டது. 1998ம் ஆண்டு காலப்பகுதியில் 2000ற்கும் மேற்பட்ட நிறுவனங்களால் இது அடையாளம் காணப்பட்டு Ericson, Microsoft, Intel, Nokia, Toshiba and Motarola போன்ற நிறுவனங்களால் ப்ளூடுத் 1.0 பதிப்பு 1999ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பரிணாமமானது இன்றைய இளைஞர்களுக்கிடையில் வீடியோ, MP3,  புகைப்படங்கள் போன்றவற்றை இலவசமாக பகிர்ந்து கொள்வதற்கு இது வசதி செய்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.