புத் 63 இல. 17

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 18, 2010

 
.

பொன்னர் சங்கர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த்

பொன்னர் சங்கர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த்

பொன்னர் சங்கர் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடினார் நடிகர் பிரசாந்த்.

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டுவது பிரசாந்த் வழக்கம் இந்த ஆண்டும் தன் பிறந்த நாளை அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் கொண்டாடினார் பிரசாந்த்.

சென்னை அடையாறு பாம்புப் பண்ணை அருகே பொன்னர் சங்கர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில், தியாகராஜன் இயக்கத்தில் வளர்ந்து வரும் இப்படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரசாந்தின் பிறந்தநாள். இந்த நாளை அவர் பொன்னர் சங்கர் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடினார். ஒரு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது.

பிரசாந்தின் தந்தையும் படத்தின் இயக்குநருமான தியாகராஜன், பிஆர்ஓநிகில் மற்றும் சக நடிகர்கள் இதில் பங்கேற்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.