புத் 63 இல. 17

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 18, 2010

 
.
பொதுநலவாய அமைப்பு நாடுகள்

பொதுநலவாய அமைப்பு நாடுகள்

கொம்மன்வெல்த் நாடுகள் கொம்மன்வெல்த் நாடுகள் மாநாடு, கொம்மன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்ற வார்த்தைகள் அடிக்கடி நாம் கேள்விப்படும் வார்த்தைகள்தான். தமிழில் பொது நலவாய அமைப்பு என அழைக்கிறோம்.

இங்கிலாந்தின் கொலனி நாடுகளான அதாவது, இங்கிலாந்தின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்த 53 நாடுகளின் கூட்டமைப்புதான் கொமன் வெல்த். இதன் உறுப்பு நாடுகள் மாறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல் பிண்ணனியைக் கொண்டவை.

1926ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி ஏற்படுத்தப்பட்ட பால்பர் உடன்படிக்கையின் படி 1931ம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி உருவாக்கப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சாசனத்தின் படி 1949ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி லண்டன் பிரகடனம் மூலம் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கு வலுவூட்டுவது, மனித உரிமைகளைக் காப்பது, நல்லாட்சி தருவது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது, தனிமனித உரிமை காப்பது, மனித சமூக சமத்துவம் பேணுவது, தாராள வர்த்தகம் நடத்துவது, உலக சமாதானத்தை நிலை நிறுத்துவது ஆகியன பொது நலவாய நாடுகளின் முக்கிய குறிக்கோளாகும்.

எலிசபத் மகாராணிதான் பொதுநலவாய நாடுகளின் தலைவி. ஆனால் பெயரளவில்தான். ஆனால் எல்லா நிர்வாக பொறுப்புகளையும் ஏற்று நடத்துபவர் கொம்மன்வெல்த் தலைமைச் செயலாளரே. இதன் தலைமைப் பொறுப்பு இங்கிலாந்திற்கு இருந்தாலும் பிற உறுப்பு நாடுகள் மீது அது தனது அதிகாரத்தை செலுத்த முடியாது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமையகம் லண்டனில் மார்லப்பரோ ஹவுசில் அமைந்துள்ளது. இதன் தலைமைச் செயலாளர் பொறுப்பை வகிப்பவர் (தற்போது) டொனால்ட் மெக்கினன் (நியூசிலாந்து). தற்போது இந்தப் பதவியை ஏற்றிருப்பவர் கமலேஷ் சர்மா (இந்தியா) இப்போது இவர் இங்கிலாந்தில் இந்திய தூதுவராக இருந்தவர்.

ஆன்டிகுவா, பார்புடா, அவுஸ் திரேலியா, பஹாமா, வங்களாதேசம், பார்படோஸ், பெலிஸ், பொட்ஸ் வானா, புரூனே, கெமருன், கனடா, சைப்பிரஸ், டொமினிகா, பிஜி, காம்பியா, கானா, கிரீனீடா, கயானா, இந்தியா, ஜமய்க்கா, கென்யா, கிரிபாடி, லெசத்தோ, மாலவி, மலேசியா, மாலைதீவுகள், மால்டா, மொரிசியஸ், மொசாம்பிக், நமிபியா, நப்ரு, நியூசிலாந்து, நைஜிரியா, பாகிஸ்தான், பப்புவா நீயுகய்னியா, செயின்ட் கிட்ஸ் அன் நெயிட்ஸ், செயின் லூசியா, செயின்ட வின்செட் அன்ட் இரிநாட்டில், சமோவா, கிகில்லிஸ், சியர்ரா லியோன், சிங்கப்பூர், கலமன் தீவுகள், தென்ஆபிரிக்கா, இலங்கை, சுவாசிலாந்து, தான்சானியா, டோங்கா, ட்ரினிடாட், அன்ட் டொபாக்கோ, டுவாலு, உகாண்டா, இங்கிலாந்து, வணுவாட்டு, ஸாம்பியா ஆகியன கொம்மன் வெல்த் நாடுகள் ஆகும்.

கொம்பன் வெல்த் நாடுகள் மக்கள் தொகை 192 கோடிகளாகும். இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பது முக்கியமான அம்சம்.

பொதுநலவாய நாடுகளின் மொத்தப் பரப்பு 1 கோடியே 21 இலட்சம் சதுர மைல்களாகும். கொம்மன் வெல்த் நாடுகளில் இந்தியா (110 கோடி), பாகிஸ்தான் (16.5 கோடி), பங்களாதேசம் (14 கோடியே 80 இலட்சம்), நைஜீரியா (13 கோடியே 70 இலட்சம்), இங்கிலாந்து (6 கோடி) மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட கொம்மன்வெல்த் நாடு என்ற பெயரை டுவாலு (11 ஆயிரம்) தட்டிச் செல்கிறது. பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.

கிண்ணியா நிலாம்டீன்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.