புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

 
.

சிம்புவின் வெற்றி தோல்வி

சிம்புவின் வெற்றி தோல்வி

யானா குப்தா, மந்த்ரா பேடி போன்ற இந்தி இளங்காத்து தமிழ் பக்கம் வீசியதற்கு சிம்புவே காரணம். சானியா மிர்சாவையும் கதாநாயகியாக்க அவர் எடுத்த முயற்சி அவரது மகத்தான தோல்விகளால் ஒன்றாக முடிந்தது.

கே. வி. ஆனந்தின் கோ படத்திலிருந்து சிம்பு விலகியதற்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்யாததே காரணம் என்றொரு பேச்சும் இருக்கிறது.

எப்படியோ நாயகி விஷயத்தில் இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி வெற்றியும் தோல்வியும் சரி விகிதத்தில் கலந்தே சிம்புவுக்கு கிடைத்திருக்கிறது.

சிம்பு இயக்கி நடிக்கும் வாலிபன் படத்தில் வரலட்சுமி, ஸ்ருதி ஹாசன் தொடங்கி லியானா, தமன்னா வரை பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் இறுதியில் சிம்பு டிக் செய்திருப்பது அசினை என்கின்றன தகவல்கள்.

இந்தியில் கோட்டை கட்டலாம் என்று நினைத்த அசினை கட்டம் கட்டிவிட்டது பாலிவுட். பொழுது போகாமல் இருப்பதற்கு தமிழ், தெலுங்கில் நடிக்கலாமே என்று இறங்கி வந்திருக்கிறார்.

விஜய்யின் 51 வது படத்தில் இவர்தான் ஹீரோயின். சித்திக் இந்தப் படத்தை இயக்குகிறார். அவர் தமிழில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் இன்னொரு படம் வாலிபன் என்கிறார்கள்.

அசினுக்கு ஆனாலும் தைரியம் ஜாஸ்திதான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.