இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நியமனப் பத்திரங்களை
தாக்கல் செய்யும் தருணம் இது. இவ்வேளையில் சுதந்திர இலங்கை சந்தித்த முதலாவது பொது
தேர்தல் பற்றிய சுவையான விபரங்களை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?
சோல்பரி ஆணைக் குழுவின் பரிந்துரைக ளுக்கேற்ப எமது நாட்டுக்கு பிரித்தானிய
ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை கிடைக்கும் பட்சத்தில் நாட்டின்
நிர்வாகத்தை சீராக முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றம் செனட் சபை எனும் அலகுகளி
னாலான நிர்வாக முறையொன்று தேவை என்பது உணரப்பட்டது.
இதன் பிரகாரம் அறிமுகம் செய்ய ப்பட்ட ஆட்சி முறையின் கீழ் மக்கள் பிரதிநிதிகளாக 95
பேரும், நியமன அங்கத்தவர்கள் என்ற வகையில் 6 பேரும் செனட் சபை உறுப்பினர்களாக 30
பேரையும் உள்ளடக்கியதாக இந்த ஆட்சி மன்றம் அமைய வேண்டும் என சோல்பரி ஆணைக்குழுவின்
அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் 1947ம் ஆண்டு. இந்நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலுக்கான
வியூகங்கள் வகுக்கப்பட்டன. தொகுதி நிர்ணய நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது பல்லின மக்கள் கூடிவாழும் பிரதேசங்கள் இனங்காணப்பட்டு அவை இரட்டை
அங்கத்தவர் தொகுதிகள் என பெயரிடப்பட்டன. குறிப்பாக கொழும்பு மத்தி 3 அங்கத்தவர்
தொகுதியாக இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்ப ட்டது. இதன் கீழ் வரும் ஏனைய தொகுதிகளான
கடுகண்ணாவ, பதுளை, பலாங் கொடை, மற்றும் அம்பலாங்கொட, பலப்பிட்டிய ஆகிய தொகுதிகள்
இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக விளங்கின. மேற்படி தொகுதி அமைப்பு பணிகள்
மேற்கொள்ளப்படும் போது ஒரு தொகுதி 70,000 முதல் 90,000 பேர் வரையிலான சனத் தொகை
கொண்டதாக அமைய வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
அதன் பிரகாரமே தொகுதி நிர்ணயப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதனை அடுத்து கட்சிகள்
தேர்தலுக்குத் தயாராகின. அன்று பிரபல கட்சிகளாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி 98
வேட்பாளர்க ளையும், இலங்கை சமசமாஜக் கட்சி 28 வேட்பாளர்க ளையும், நிறுத்தியதோடு
மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இலங்கை இந்திய காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி,
என்பவற்றோடு மேலும் சில கட்சிகளும் தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தின. இது தவிர
181 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர்.
1947 ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் திகதி நியமனப்பத்தி ரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதே
தினத்தி லேயே ஒரு உறுப்பினர் போட் டியின்றியே பாராளுமன்றத் துக்குத் தெரிவு
செய்யப்பட்டமை ஒரு முக்கிய நிகழ்வாகும். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் புத்தளம்
தேர்தல் தொகுதியின் வேட்பாளரான எச்.எஸ். இஸ்மாயில். இலங்கையின் முதலாவது
பாராளுமன்றப் பிரதிநிதி. என்ற பெருமைக்கு உரியவராகவும் வவளங்கிய இவர் நாட்டின்
முதலாவது முஸ்லிம் சபாநாயகராகவும் பிற்காலத்தில் பணிபுரிந்தமையும் குறிப்பிடத்தக்
கதாகும்.
நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இடம்பெற்ற நாட்டின் முதலாவது பொதுத்
தேர்தல் 19 தினங்கள் இடம்பெற்றன. ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி முதல் செப்டம்பர் மாதம்
20ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 19 நாட்கள் இடம்பெற்ற இத்தேர்தலைத் தொடர்ந்து
வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.
இறுதி முடிவுக ளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி 42 இடங்க ளையும், சுயேட்
சையாளர்கள், 21 இடங்களையும் சமசமாஜக் கட்சி 10 இடங்களையும் மிகுதியை சிறு கட்சிகளும்
தம்வசமாக்கிக் கொண்டன. இத்தேர்தலில் தேசிய அரச பேரவையின் தலைவராக விள ங்கிய வைத்திய
லிங்கம் துரைசாமி உபதலைவர் சுசந்தா டி பொன்சேக்கா, அமைச்சர் சீ. டப்ளியூ. டப்ளியூ.
கன்னங்கர, அமை ச்சர் அருணாச் சலம் மகாதேவா போன்றோர் தோல்வி அடைந்தனர்.
அன்று மிகவும் பிரபலமான அரசியல் வாதிகளாக விளங்கிய டீ.எஸ்.சேனநாயக்க,
ஜே.ஆர்.ஜயவர்தன. எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, பிலிப் குணவர்தன. கொல்வின்
ஆர்.டி.சில்வா, எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.பி. ஜாயா என்.எம்.
பெரேரா போன்றோர் உட்பட மற்றும் பலரும் முதலாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகினர்.
இத் தேர்தலில் ஆகக் கூடிய மேலதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத்
தெரிவானவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.
பண்டாரநாயக்க ஆவார்.
அத்தனகல்லை தொகுதியில் போட்டியிட்ட அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 31,463
ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவரை விடவும் 26,852 வாக்குகளை மேலதிகமாகப்
பெற்று அவர் வெற்றி ஈட்டினார். இவரைத் தொடர்ந்து அதிக மேலதிக வாக்குகளைப்
பெற்றவர்கள் வரிசையில் டீ.எஸ்.சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, பிலிப் குணவர்தன
ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆகக் குறைந்த அளவு மேலதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர் நிவிதிகல தொகுதியில்
போட்டியிட்ட டீ.எப்.ஹெட்டி ஆரச்சி ஆவார். இவருக்கு கிடைத்த மேலதிக வாக்குகள் 24
ஆகும்.
அன்றைய தேர்தல் முடிவுகள் அரசொன்றை அமைக்க தேவையான அளவு பெரும்பான் மையக் கொண்டிராத
காரணத்தினால் கூடிய எண்ணிக்கையான ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அகில
இலங்கை தமிழ் காங்கிரஸோடு இணைந்து ஆட்சி அமைத்தது. பிரதமராக டீ.எஸ்.சேனநாயக்க
பதவியேற்றார்.
தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களாக காங்கேசன் துறையில் இருந்து எஸ்.ஜே.வி செல்வநாயகமும்,
வட்டுக்கோட் டையில் இருந்து கே. கனகராட்ணமும், சாவகச்சேரியில் இருந்து
வி.குமாரசாமியும், யாழ்ப்பாணத்தி லிருந்து ஜி.ஜி. பொன்னம்பலமும், பருத்தித்துறையில்
இருந்து டீ. ராமலிங்கமும், திருமலையில் இருந்து எஸ்.சிவபாலன், கோப்பாயில் இருந்து
சி. வன்னியசிங்கம் ஆகிய எழுவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக கொட்டகலையில் இருந்து கே.குமாரவேலு, மஸ்கெலியாவில்
இருந்து ஜி.ஆர்.மோத்தா, நாவலப்பிட்டியில் இருந்து கே.ராஜலிங்கம், பதுளையில் இருந்து
எம்.சுப்பையா, நுவரெலியாவில் இருந்து எஸ். தொண்டமான், தலவாக்கலையில் இருந்து சி.வி.
வேலுப்பிள்ளை ஆகிய அறுவர் முதலாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.
செனட் சபையில் 15 பேர் அங்கம் வகித்தனர். இவர்களில் மூவர் தமிழர். எஸ். நடேசன்,
எம்.வி. நாகநாதன், பெரிசுந்தரம் ஆகியோரே இத்தமிழ் செனட்டர்களாவர். முஸ்லிம்
சமூகத்தின் சார்பாக ஏ.ஆர்.ஏ.ராஸிக் நியமனம் பெற்றிருந்தார்.
பெலியத்த தேர்தல் தொகுதியில் இருந்து டீ.ஏ.ராஜபக்ஷ 8 ஆயிரத்து 22 அதிகப்படி
வாக்குகளினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் தந்தையாவார். டெய்லி நியூஸ் பத்திரிகை 1947 பாராளுமன்றம் தொடர்பான
வெளியீட்டில் டீ.ஏ.ராஜபக்ஷவைப் பற்றிக் குறிப்பிடுகையில், நில உரிமையாளர், விவசாயி,
காலி ரிச்மன்ட் கல்லூரியில் கல்வி கற்றவர் என்றும் கல்லூரி உதைபந்தாட்ட மற்றும்
கிரிக்கெட் அணிகளின் கப்டனாகவும் விளங்கியவர் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி சுதந்திரம் பெற்றுக்
கொடுக்கப்படும் என்று 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி உத்தியோக பூர்வமாக
அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே அரசாங்கத்தை அமைக்கும் பணிகள் மும்முரமாக
முன்னெடுக்கப்பட்டன.
சுதந்திர இலங்கையில் முதலாவது கவர்னராக பதவியேற்றவர் சேர். ஹென்றி மேசன் முவர் ஆவார்.
முதலாவது பிரதமராக டீ.எஸ்.சேனநாயக்க பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து 1947 நவம்பர்
மாதம் 26ம் திகதி சுதந்திர இலங்கையின் முதலாவது அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து
கொண்டது.
முதலாவது அமைச்சரவை யில் சுகாதார உள்ளூராட்சி அமைச்சராக எஸ்.டபிள்யூ.
ஆர்டி.பண்டாரநயாக்காவும், உள்நாட்டலுவல்கள் கிராம அபிவிருத்தி அமைச்சராக சர். ஒலிவர்
குணதிலக்கவும், தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக டி.பி. ஜயாவும்
நிதியமைச்சராக ஜே.ஆர்.ஜயவர்தனவும் போக்குவரத்து அமைச்சராக சேர் ஜோன் கொத்தலாவலவும்
இடம்பெற்றிருந்தனர்.
மேலும் விவசாய காணி அமைச்சராக டட்லி சேனாநாயக்கவும், துறைமுகங்கள் மற்றும் தொலைத்
தொடர்பு அமைச்சராக சி. சிற்றம்பலமும், வர்த்தக வாணிப அமைச்சராக சி.சுதந்தரலிங்கமும்,
பதவியேற்றிருந்தனர்.