புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

 
.
'இசைத்துறைக்கு வருபவர்கள் நிலைத்து நிற்க வேண்டும்!'

'இசைத்துறைக்கு வருபவர்கள் நிலைத்து நிற்க வேண்டும்!'

- லில்லி மயில்வாகனம்

‘தென்னை மரத் தோப்புக்குள்ள தண்ணீர் கொண்டு போறபுள்ள’

என்று இறைதாசன் எழுதிய மெல்லிசைப்பாடலுக்கான குரலுக்குரியவர்தான் லில்லி மயில்வாகனம். 1979 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் இசைத்துறையில் பங்களிப்புச் செய்து வருகிறார். கலை, இலக்கியவாதிகளை உருவாக்குவதில் இலங்கை வானொலிக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. அவ்வாறு கத்தோலிக்க சிறுவர் நிகழ்ச்சி மூலம் வெளியில் வந்தவர்தான் லில்லி. அதேபோல் மகள் பிரசாந்தினியும் இன்று பிரகாசிப்பதையிட்டு மகிழ்ச்சி என்கிறார் தினகரன் கதம்பத்திடம்.

“பாடசாலை காலத்தில் கத்தோலிக்க சிறுவர் நிகழ்ச்சியில் பங்குகொண்டு எனது திறமையை வெளிப்படுத்தினேன். அப்போது அறிவிப்பாளர் சீதாராமன் அவரது இசைக் குழுவில் பாடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கினார். பின்னர் மோகன் - ரங்கனின் அப்சராஸ் இசைக் குழுவில் இணைந்து பாடத் தொடங்கினேன். இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்தும் பாடியுள்ளேன். பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றியுள்ளேன்” என்றவரிடம்,

“நம் நாட்டுப் பாடல்கள் எத்தனை பாடியுள்Zர்கள்?” என்று ஆவலாய் கேட்டதற்கு,

“வெறும் ஆறு பாடல்களைப் பாடுவதற்குத்தான் வாய்ப்பு தந்தார்கள். அதிலும் தொலைக்காட்சியில் இரண்டு பாடல்கள்தான் இடைக்கிடை ஒளிபரப்பாகின்றன. வானொலியில் பொங்கல், தீபாவளி என்றால்தான் மெல்லிசைப்பாடல் ஞாபகம் வரும். அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் (இறைதாசன்) எழுதி மோகன்ராஜ் இசையமைத்திருந்த ‘தென்னைமரத் தோப்புக்குள்ள, தண்ணீர் கொண்டு போறப்புள்ள’ என்ற பாடல் பிரபல்யமானது” என்றார்.

‘நம் நாட்டில் உருவாகும் பாடல்கள் மக்களைச் சென்றடைந்து பிரபல்யமடைவது குறைவு என்றால் சரியா?’

‘குறைவாகத்தான் இருக்கின்றது. இசைத்துறைக்கு வருபவர்கள் முயற்சி செய்வது போதாது. எல்லோரும் இடையில் விட்டுவிட்டுப் போகிறார்கள். அந்த வகையில் மகள் பிரசாந்தினி முழு முச்சாக இந்தத்துறையில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி அவர் விரும்பிய துறையில் முன்னேறி வருகிறார்.’

‘உங்கள் காலகட்டத்தில் இசைத்துறையை மேம்படுத்துவதற்கு நமது விளம்பரதாரர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இருந்ததா?’

“வர்த்தகர்களின் ஒத்துழைப்பு குறைவுதான். அவர்கள் தொடர்ச்சியான பங்களிப்பைச் செய்திருந்தால் நம் நாட்டு இசைத்துறை எங்கோ போயிருக்கும். அத்தோடு கலைகளும் முயற்சி எடுக்க வேண்டும்.

லில்லி மயில்வாகனம் நம் நாட்டுப் பாடல்களைக் குறைவாகப் பாடியிருந்தாலும் மக்கள் மனங்களில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தின் பிரபலப் பாடக, பாடகிகளுடன் இணைந்து பாடி பாராட்டைப் பெற்ற லில்லி ஒரு திறமையான வாரிசை உருவாக்கியதையிட்டு பெரு மகிழ்ச்சி என்கிறார்.

“அம்மாவைப்போல் இசைத்துறையில் குறுகிய காலத்தில் பிரபல்யமடைய கிடைத்தது பெரும் பாக்கியம்தான்” என்கிறார் லில்லியின் இரண்டாவது பிள்ளையான பிரசாந்தினி. அவருக்கும் அம்மாவைப் போலவே பாடசாலை காலத்திலிருந்து இசைத்துறையில் ஓர் ஆர்வம்.

“நான் இசைத்துறைக்கு வருவதற்கு அம்மாதான் காரணம். பாடசாலை நாட்களில் ஆசிரியர்மாரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். வலய, மாகாண, அகில இலங்கை மட்டத்தில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியிருக் கிறேன். அப்போது சக்தி தொலைக்காட்சியின் இளையகானம் நிகழ்ச்சியில் பங்குபற்றி இறுதிப் போட்டியில் வெற்றியீட்டினேன். பாடசாலையிலிருந்து வெளியேறியதும்தான் ‘சுப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் பங்குகொண்டேன்” என்று கூறும் பிரசாந்தினியின் குரல் இன்று வானொலி, தொலைக்காட்சிகளில் ஏராளமான விளம்பர குறி இசைகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது தவிர இந்து, கிறுஸ்துவ, இஸ்லாமிய பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார். சுப்பர் ஸ்ரார் அல்பத்துக்காக இந்தியாவுக்குச் சென்றமை நல்ல ஓர் அநுபவமாக இருந்தது என்பதுடன் மலேசியாவில் தீபாவளிப் பாடலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தமை தனது இசைத்துறைப் பயணத்தில் புதிய திருப்பமாகும் என்கிறார். கோலாலம்பூரில் நடந்த தீபாவளி பாடல் எழுதும் போட்டியில் நாகபூஷனி கருப்பையா எழுதிய ‘ஐப்பசி மழையில்’ என்ற பாடலை பிரசாந்தினிதான் பாடியிருக்கிறார். தனது இசைப் பயணத்தைப்பற்றி கதம்பம் வாசகர்களுடன் மேலும் பகிர்ந்துகொள்ளும்போது-

பாடசாலையில் 5 ஆம் வகுப்பு படிக்கும்போது இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடினேன். எமது ஆசிரியர் வீ.என்.எஸ். உதயச்சந்திரன் நடத்திய நிகழ்ச்சியில் இரண்டு வருடங்களாக கலந்துகொண்டேன். இசைத்துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தினால் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் பங்குகொண்டேன். சக்தி சுப்பர் ஸ்ரார் நிகழ்ச்சியில் புகழ் கிடைத்தபின் இரண்டரை வருடம் எஸ்.எம்.எஸ். கலாட்டா நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி இசைக் குழுக்களில் இணைந்து பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுபோல் பாடகர்கள் யுகேந்திரன், சத்யன், பென்னி தயாள், முகேஷ், நரேன், ஹரிச்சரன் ஆகியோருடன் பாடியிருக்கிறேன்.

இலங்கையின் இளம் இசைக் கலைஞர்களான செந்தூரன், ஸ்ரீ விஜிந்தன், ஸ்ரீ பிருந்தன், சுதர்ஷன் உள்ளிட்டோருடன் இணைந்து, இசை அல்பங்களிலும் பாடியுள்ளேன். இதற்கு வாய்ப்பு அளித்த கலைஞர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.”

“இசைத்துறையில் முன்னணிக்கு வரவேண்டும் என்பதுதான் உங்களின் இலக்கா?”

“ஆம். இசையால் வசமாகா இதயம் எது? இலங்கையின் இசைத்துறையில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். இசைக்கு என்றும் தலைவணங்கும் இதயம் நான்!”

என்று கூறும் பிரசாந்தினி ஆரம்ப காலகட்டத்தைப் போலல்லாது இப்போது விரும்பிய துறையில் கற்றுத் தேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

அம்மாவின் காலத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. படிப்பை விட்டுவிட்டு இசைத் துறைக்கு வருவது குறைவாகத் தான் உள்ளது. வருபவர்கள் புதுமைகள் செய்து சாதனைகள் புரிய வேண்டும். அந்தச் சாதனை கள் மக்களை சென்றடைய வேண்டும்” என்கிறார்.

“உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள என்ன செய்கிaர்கள், நமது சொந்தப் படைப்புகள் மேம்பட என்ன செய்ய வேண்டும் என்கிaர்கள்?”

“நான் தற்போது முறையாக சங்கீதம் பயின்று வருகிறேன். நாம் நமது தனித்துவங்களுடன் இலங்கைப் பாடல்களை முன்னி லையாக்கிக்கொண்டு வரவேண் டும். ஊடகங்கள் தற்போது ஆற்றும் பணிகளை இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.