புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

 
.

சுகாதார விழிப்புணர்வு பிரசாரத்தில் டெட்டோல்

சுகாதார விழிப்புணர்வு பிரசாரத்தில் டெட்டோல்

உலக சுகாதார மேம்பாட்டுக்கு நீண்ட காலமாக பெரும் பங்களிப்பு செய்து வரும் டெட்டோல், இலங்கையின் பொது சுகாதார அபிவிருத்திக்கு பிரசாரங்களின் மூலம் சேவையாற்றி வருகிறது. டெட்டோல் உற்பத்திகளை சந்தைப்படுத்தினால் மட்டும் போதாது என்பதை உணர்ந்தே புதிய பிரசார உத்திகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ரெக்கிட் பென்கையர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரியஸ¤ல் செளத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்தபோது ‘டெட்டோல் வழிகாட்டுகிறது’ என்ற பிரசாரத்தின் ஊடாக பாடசாலைகளில் கைகழுவுவது எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்டது. நாடெங்கும் உள்ள 50 பாடசாலைகளில் நேரிடையாக டெட்டோல் பிரசார குழுவினர் சென்று சரியான முறையில் கைகழுவுவது எப்படி என்பதை செய்முறையில் செய்து காட்டினர். முறையாகக் கைகழுவுவதன் மூலம் கிருமித் தொற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதோடு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. கிருமித் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வது, பிரசவத் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வளவு தூரம் இன்றியமையாதது என்பது எடுத்துக் கூறப்பட்டு அது தொடர்பான பிரசுரங்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

மக்கள் மத்தியில் தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் டெட்டோல், ஆஸ்பத்திரி வார்ட்டுகளைப் புதுப்பிக்கும் திட்டமொன்றையும் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.