Tuesday, March 19, 2024
Home » 11 ஆண்டுகளின் பின்னர் ட்விட்டர் வந்தார் சக்கர்பேர்க்

11 ஆண்டுகளின் பின்னர் ட்விட்டர் வந்தார் சக்கர்பேர்க்

by gayan
July 7, 2023 4:12 pm 0 comment

பேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பேர்க் 11 ஆண்டுகளின் பின்னர் ட்விட்டர் சமூகதளத்திற்கு பிரவேசித்துள்ளார்.

நேற்று (06) ட்விட்டரில் பிரவேசித்த அவர் எதுவும் குறிப்பிடாது, ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தன்னைப் போன்றே இன்னொரு உருவத்தை எதிர்கொள்வது போன்ற படம் ஒன்றை கேலியாக பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா ட்விட்டருக்கு போட்டியாக த்ரீட்ஸ் என்ற செயலியை நேற்று வெளியிட்டதை அடையாளப்படுத்தும் வகையிலேயே அவர் ட்விட்டரில் இந்தப் பதிவை இட்டுள்ளார்.

அந்த புதிய செயலி வெளியிடப்பட்டு ஏழு மணி நேரத்திற்குள் அதில் பத்து மில்லியன் பயனர்கள் இணைந்ததாக சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரை எலொன் மஸ்க் கடந்த ஒக்டோபரில் வாங்கிய பின் அதில் பல கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனால் அதிருப்தி அடைந்திருக்கும் ட்விட்டர் பயனர்கள் புதிய த்ரீட்ஸ் சமூகதளத்தில் இணைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்து மூலம் கருத்தை பகிரும் ட்விட்டரை ஒத்த த்ரீட்ஸ் சமூகதளத்தை இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக ஒருவர் ஆரம்பிக்க முடியும். இதில் புகைப்படங்கள், குறுகிய, உயர் தர வீடியோக்களையும் பகிரலாம்.

மேலும் ட்விட்டரில் 280 வார்த்தைகள் வரம்பு இருந்து வரும் நிலையில், இந்த த்ரீட்ஸ் செயலியில் 500 வார்த்தைகள் வரை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தப்பது.

2009 ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த சக்கர்பேர்க் கடைசியாக 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே ட்விட் பதவி ஒன்றை செய்திருந்தார்.

மெடா தலைவர் மார்க் சக்கர்பேர்க் மற்றும் ட்விட்டர் உரிமையாளர் இலொன் மஸ்க் இடையிலே நீடிக்கும் மோதலின் தொடர்ச்சியாகவே இந்த ெசயலி வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இருவரும் நேரடியாக சண்டையிட இணங்கிய நிலையில் இருவரது மோதல் எந்த அளவு தீவிரமானது என்பது தெளிவின்றி உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT