மனிதர்கள் உலகில் வாழும் போது வஞ்சகம், பிறருக்கு தீங்கிழைத்தல், பொய், துஷ்டச்
செயலிலீடுபடுதலினால் ஆவியாக பிறந்து வேதனை அடையும் நிலை உருவாகிறது.
இதனை மஹாசமய
சூத்திரத்தின் இருபத்தெட்டாவது கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேதனையிலிருந்து
தவிர்ந்து கொள்வதற்கு எமது வாழ்வை தர்மத்தின் அடிப்படையில் செப்பனிட்டுக் கொள்ள
வேண்டும்.
கோட்டை ஸ்ரீஜயவர்தனபுர புதிய பாராளுமன்ற கட்டிட நிர்மாணத்தின் போது அச்சமயம் அங்கு
குடியிருந்தவர்கள் அகற்றப்பட்டு நுகேகொடை பிரதேசத்தில் அரசாங்கத்தினால் இவர்களுக்கு
வீடுகள் வழங்கப்பட்டன.
இதில் நான்கு பேரடங்கிய குடும்பமொன்றிருந்தது. தாய், மகன்,
மருமகள், பேரனாகியோர் இவர்களாவர்.
மகன் ஒரு பொலிஸ் அதிகாரி. இவர் கடமையிலிருந்து வீடு திரும்பும் போது தினமும
மதுவுக்கு அடிமையாகி வீட்டிலுள்ள பொருட்களை உடைப்பதுடன் தாயையும் மனைவியையும்
தாக்குவது வழமை.
இதன் காரணமாக பிள்ளையின் கல்வியிலும் பாதிப்பேற்பட்டது. மகனுக்கு
கல்விச் செல்வமளித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் ஒரு பொலிஸ்
அதிகாரியாக்க வேண்டுமென்பது தாயின் அபிலாஷையாகும்.
பொலிஸ் அதிகாரியான தன் மகன் மது போதையில் தினமும் தன்னை தாக்குவதால் மனமுடைந்த அவர்
நிம்மதியிழந்தார். சில நாட்களின் பின் இந்த தாய் நோய்வாய்ப்பட்டார்.
சிகிச்சைகள் பல
செய்தும் சுகம் பெறாத நிலையில் நாவின்னை, ஆயுர்வேத வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லப்பட்டார். வைத்தியர் இவரை பரிசோதித்து விட்டு இவருடைய உடலாரோக்கியம்
குன்றியதற்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பல மாதங்களாகியும் சுகம் கிடைக்கவில்லை.
“அம்மா நான் பல மாதங்களாக உங்களுக்கு சிகிச்சையளித்து விட்டேன். சற்றேனும் குணம்
தென்படவில்லை. நான் நினைக்கிறேன். இவை நோயல்ல நீங்கள் அதுருகிரிய விபஸ்ஸனா தியான
மத்திய நிலையத்துக்கு சென்று பிரதம மதகுரு வண. கஸ்நாவே ஞானானந்த அவர்களை சந்தித்து
உங்கள் நோய் விபரங்களை தெரிவியுங்கள்.
அவர் பணம் எடுக்க மாட்டார். உரிய ஆலோசனை
உங்களுக்கு கிடைக்கும் என வைத்தியர் தெரிவித்தார். இதையடுத்து மகன் மருமகளுடன்
மதகுருவை சந்திக்க சென்றார்.
மதகுரு பணம் பெறாததால் ஆலயத்துக்கு அன்றாடம் தேவையான
சீனி, தேயிலை, பால்மா அத்துடன் வெற்றிலையும் எடுத்தவாறு தனது நோய் விபரங்களை
மதகுருவிடம் தெரிவித்து வைத்திய துறையினால் சுகம் கிடைக்காததால் தானிங்கு வந்ததாயும்
தாய் தெரிவித்தார்.
வண. ஞானானந்த மதகுரு இப்பெண்ணுக்கு செத் பிரித் ஓதி ஆசீர்வாதம் செய்து
அங்கிருந்தவாறு தியானம் செய்யுமாறு புத்தானுஸ்ஸதி தியானம் பற்றி சொல்லிக் கொடுத்தார்.
இதனை அப்பெண் முதலாவதாக உச்சாடனம் செய்யும் போது அவருடைய முழு உருவமும் மாற்றமடைந்து
அழத்து வங்கினார்.
‘முடியாது நான் போக வேண்டும், எனக்கொன்றும் வேண்டாம், பிள்ளைகளே
நாமிங்கிருந்து செல்வோம்’ என அப்பெண் அழுதார். ஹா... ஹா... இவை தெய்வ சக்தி நிறைந்த
இடம். இங்கு தடுமாற்றமடையாவோ, துடிக்கவோ, துஷ்டசெயல்களிலீடுபட முடியாது.
வாழ்நாளில்
செய்த பாவங்கள் போக இன்னும் பாவங்களை சுமக்கப் போகிறயோ, இப்பெண்ணின் உடலில் புகுந்து
தொந்தரவு செய்யும் நீ யார் பேசு பார்க்கலாமென்றார் மதகுரு.
“முடியாது முடியாது இங்கு என்னால் இருக்க முடியாது, உடல் எரிகிறது. வேதனை தாங்க
முடிவில்லை. நான் போக வேண்டு’மென மீண்டும் அழுதது.
“ஆமாம் உமக்கு போக முடியும். அதற்கு முன் உடலில் குடிகொண்டுள்ள ஆவியாகிய நீ யார்
என்று கூறு”மென மதகுரு வினவினார்.
‘கூற முடியாது’, ‘என் கூற முடியாது?’ அவ்வாறெனில் நான் வைஸ்ரவன தெய்வத்திடம்
பேசுவேன்’ என மதகுரு கூறியதும் ‘வேண்டாம் வெசமுனி அரசனிடமும் கூற வேண்டாம்’ என ஆவி
வேண்டியதும். ‘சரி உண்மையை சொல்லும், இப்பெண்ணின் உடலில் புகுந்துள்ள நீ யார்’ எனக்
கேட்டதும் ஆவி தடுமாற்றமடைந்து அங்குமிங்கும் பார்த்து இவ்விருவரையும் சற்று தூரமாக
இருக்கும் படியும் அவர்களிருவரும் அறியாத இரகசிய மொன்றுள்ளது எனவும் கூறியது.
மகனையும் மருமகளையும் தூரமாயிருக்கும்படி மருகுரு வேண்டினார். இதன் பின்னர் ஆவி
பேசியது. “மதகுருவே நான் அந்த வீட்டு குசுமாவதி. வாழும் நாட்களில் மிகவும்
துன்பப்பட்டேன். என் கணவர் தினமும் மதுவருந்தி இரவு வேளைகளில் என்னை தாக்குவார்.
ஒரு நாளும் இவை தப்பாது நடைபெறும்.
சிங்களப் புத்தாண்டு தினமும் வெசாக் தினமும்
இவைகளுக்கு விதி விலக்கல்ல. அச்சமயம் அடுத்த வீட்டிலுள்ள இவர்கள் சந்தோசமாக
வாழ்ந்தார்கள். இரவு வேளைகளில் தொலைக்காட்சியுடன் கூத்தும் கும்மாளமுமாயிருந்தனர்.
பொலிஸ்காரர் தினமும் மாலையில் வீடு வரும்போது பெரிய பொதிகளை கொண்டு வந்து
மனைவியிடம் கொடுப்பார். இவைகளையெல்லாம் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை
பொறாமையாயிருந்தது.
இந்நிலையில் கணவரினால் தினமும் தாக்கப்படும் நான் நோயுற்று
இருந்தேன். இறந்த நான் மீண்டும் அவ்வீட்டில் பேராசை பிடித்த ஆவியாக பிறந்தேன்.
இவர்கள் இப்போதும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்வதைக் கண்டு சகிக்க முடியாத நான்
இப்பெண்ணின் உடலில் புகுந்தேன்.
பொலிஸ் சேவையிலுள்ள வரை மதுவின் பக்கம் செலுத்தி
அதன் மூலம் தாயையும் மனைவியையும் தாக்கச் செய்தேன். தாக்கப்பட்டவர்கள் அழுது
புலம்பும் போது அதனைப் பார்த்து நான் சந்தோசமடைந்தேன் என்றது ஆவி.
“குசுமாவதி நீ என்ன செய்கிறாய். வாழ்நாளில் செய்த பாவத்துக்காக துன்பப்பட்டு இறந்து
இப்போது பேராசை பிடித்த ஆவியாகி துயரடைவது மட்டுமன்றி இப்போதும் பிறருக்கு தொந்தரவு
செய்வது, இடுக்கணேற்படுத்துவது உன்னை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கும்.
தீயில் எந்து
சில காலம் துன்பப்பட வேண்டிவரும். அதனால் இப்போதாவது பொறாமையை கைவிட்டு பேராசை
பிடித்த ஆவியிலிருந்து விடுபட எண்ணம் கொள்” என வண. கஸ்நாவே ஞானானந்த மதகுரு
ஆவியிடம் கூறினார்.
“நல்லது மதகுருவே நான் குசுமாவதி என்பதை பொலிஸ்காரரிடம் தெரிவிக்க வேண்டாம். என்
அம்மா உன் அம்மாவின் உடலில் புகுந்துள்ளாரெனக் கூறி என் வீட்டுப் பிள்ளைகளுக்கு
இவரால் பிரச்சினையேற்படலாம். இரகசியத்தை பேணிக் கொள்ளவு”மென ஆவி மதகுருவிடம்
வேண்டியது.
“சரி குசுமாவதி, இப்போது இப்பெண்ணின் உடலிலிருந்து நீ செல்ல வேண்டும். நல்ல
இடத்துக்குச் செல்ல வேண்டும்’ என்றார் மதகுரு.
“ஐயோ மத குருவே, அவ்வாறெனில் எனக்கு நன்மை தேடித் தாருங்கள். அதனையெடுத்து நான்
நல்லிடத்துக்குச் வருகிறேன்” எனக் கூறிய பேராசை பிடித்த ஆவி அப்பெண்ணின்
உடலிலிருந்து அகன்று சென்றது.
இதையடுத்து அப்பெண் சுகமடைந்தார். ஒரு வாரத்தின் பின்
மருமகள் சுகவீனமுற்றார். இவரை வண. ஞானானந்த மதகுருவிடம் கொண்டு வந்தனர்.
இவரது உடலிலும் ஆவி ஆக்கிரமித்துள்ளதை மதகுரு அறிந்தார். “குசுமாவதி ஏன் இன்னும் நீ
தொந்தரவு செய்கிறாய். என்னிடம் ஒப்புக் கொண்டு அம்மாவின் உடலிலிருந்து விலகிச்
சென்ற நீ இப்போது மருமகளின் உடலில் புகுந்துள்ளாயல்லவா. இனி நானும்
கடினமாயிருப்பேன்.
நல்லதையும் கெட்டதையும் பார்த்துக் கொள்ளலாம். கருணையாக உன்னை
உயரிடத்துக்கு அனுப்ப எண்ணினேன். என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா பேராசை பிடித்த
ஆவியாகிய உன்னை வைஸ்ரவன தேவனின் படையிடம் ஒப்படைப்பே”னென எச்சரிக்கை செய்தார்
மதகுரு.
“மதகுருவே என்னை மன்னியுங்கள், நான் போகிறேன். உண்மையாக நான் சென்று விடுவேன்.
இவையுறுதி” என அங்குள்ள புனித பிரித் புத்தகத்தில் கையை வைத்து சத்தியம் செய்து
மருமகளின் உடலிலிருந்து விலகிச் சென்றது. அப்போது ஆவி சத்தியத்தை காப்பாற்றவில்லை.
மீண்டும் வீட்டுக்குச் சென்று மகனின் மனைவியின் உடலில் தாவி இடைஞ்சல் செய்தது.
இதனையறிந்த அவருடைய பிள்ளைகள் அதுருகிரிய விபஸ்ஸனா தியான மத்திய நிலையத்துக்கு
வந்து சிரேஷ்ட மதகுரு வண.
தங்காவே ஞானானந்த அவர்களை சந்தித்து அவரது ஆலோசனைப்படி
தானங்களும் புண்ணிய கருமங்களும் செய்து பேராசை பிடித்த ஆவியை அனுராதபுரத்துக்கு
அனுப்பினர். பொறாமையாலேற்பட்ட விளைவிது.