புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.

முஸ்லிம் வானொலி நாடகங்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தல் த்தங்கள்

முஸ்லிம் வானொலி நாடகங்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தல் த்தங்கள்

முஸ்லிம் வானொலி நாடகங்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தும் இந்த சிறிய முயற்சி ஒரு கலைவடிவத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் தூய்மையான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இதில் சிறு தவறுகள் ஏற்படலாம். அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள எப்பொழுதும் நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த முயற்சி தொடர்பான முதலாவது கட்டுரை தினகரனில் வெளியான போது எமக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்புகள் நாடகத்தின் மீது முஸ்லிம் சமூகத்தினர் கொண்டிருக்கின்ற பாரிய தாகத்தை உணர வைத்தன. நாடகம் நடித்தோ எழுதியோ அனுபவமில்லாத பலர் நீண்ட நேரம் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். அப்பொழுது நாம் கொள்ளும் முயற்சியின் சமூகத் தாற்பரியத்தை மேலும் உணர முடிந்தது.

குருநாகலை சேர்ந்த ஒரு எழுத்தாளர் தன்னுடைய ஒரு நாடகம் வானொலியில் ஒலிபரப்பானதாகவும் அதற்குரிய சிறுதொகை சன்மானத்தை (காசோலை) கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு நினைவுச் சின்னம் போல பாதுகாத்து வருவதாகவும் கூறினார். சில மூத்த கலைஞர்கள் நாடகத்திற்கு நேர்ந்துள்ள கதியை நினைத்து மனதுருகிப் பேசினார்கள். அமீர் அலி தனது காட்டுவழிப் பாதையில் வானொலி நாடகம் கேட்பதற்கென்றே புதிய பெட்டரிகளை வாங்கிச் செல்லும் கிண்ணியாவைச் சேர்ந்த முதியவரின் அனுபவத்தைப் பகர்ந்துகொண்ட பொழுது இப்போதைய முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் குறித்த பல கேள்விகள் எழுந்து மறைந்தன.

முஸ்லிம் நாடகம் நிறுத்தப்பட்டமைக்கு நிதியின்மைதான் உண்மையான காரணமாக இருந்தாலும் அது மீண்டும் தொடங்கப்படாமலிருப்பதற்கு அதுவே காரணமல்ல. இதனை நாம் பல கோணங்களில் நிரூபிக்க முடியும். நாடகம் என்ற நிகழ்ச்சி தொடங்கப்படாமைக்கு பணம் இன்மைதான் காரணம் என்று கூறுபவர்களிடம் சில நியாயமான கேள்விகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அன்றி அத்தகைய கேள்விகளையும் கேட்க வேண்டியதில்லை.

நாடகம் ஆதரிப்பாரற்று இருப்பது தொடர்பாக சில நேரடி அவதானங்களும் வாக்குமூலங்களும் இருக்கின்றன. அவற்றை இந்த இடத்தில் அன்றி நாட்டில் உள்ள நாடக ஆர்வலர்கள் யாவரும் அறியும் விதத்தில் ஒரு பொதுமன்றத்தில் சொல்ல காத்திருக்கின்றோம். (தேவையேற்பட்டால் மாத்திரம்) இந்த இடத்தில் வெளிப்பகட்டுக்காக நாடகத்தைத் தொங்குவதற்கு பாசாங்கு செய்தவர்கள் பற்றி அவசரப்பட்டு பேசக்கூடாது என்று நினைக்கின்றோம். முஸ்லிம் சேவையைப் பொறுத்தவரை அதனை முஸ்லிம் வர்த்தக சேவை என்று பெயர் வைப்பது சிறந்தது. அந்த அளவுக்கு அதன் நிதியீட்டல் அளவு மேலோங்கி இருக்கின்றது. இப்படியிருக்க, நாடகத்திற்கு சொற்பப் பணம் செலவழிப்பது என்பது எம்மாத்திரம்?

நாடகப் பிரதிகளை கைவசம் வைத்திருப்பார்கள் அவற்றின் போட்டோப் பிரதியையாவது எமக்கு அனுப்பி வைத்தால், எமது ஆய்வு முயற்சிகளுக்கு மிகுந்த துணையாக அமையும். போட்டோப் பிரதிகளுக்கான செலவினங்களை நாம் பொறுப்பேற்போம். அத்துடன் முஸ்லிம் சேவையின் ஆரம்பகால வரலாறுகள் தெரிந்தவர்களின் பங்களிப்புகள் நிறையவே தேவைப்படுகின்றன.

கடந்த வாரக் கட்டுரையில் மானா. மக்கீன், கே. ஏ. ஜவாஹர், ஏ. எச். எம். அஸ்வர், எஸ். எம். ஏ. ஜப்பார், எஸ். ஐ. எம். ஏ. ஜப்பார், எஸ். ஏ. சீ. எம். பிர்தெளசி, போன்றவர்களின் பெயர்கள் திருத்தமாக எழுதப்பட்டிருக்கவில்லை என்று அறிகின்றோம். நிச்சயமாக திருந்திய வடிவங்களை நாம் ஆய்வுக்காகச் சேர்த்துக்கொள்வோம்.

இது தவிர பாலையூற்று அஷ்ரபா நூர்தீன், பாலையூற்று பொளசியா நூர்தீன், பாலையூற்று பiரா மொஹிதீன், பாவலர் பசீல் காரியப்பர், சித்தி ரிஜா, யூ. எல். அப்பாசியா, எம். எச். எம். நZர், கிண்ணியா அமீர் அலி, ஏ. எஸ்..உபைதுல்லாஹ், எம். எச். எம். ஷம்ஸ், குருனாகல் றிஸ்வி, ஏ. பீ. எம். இத்ரீஸ், எம். எஸ். எம். ஜன்னாஹ், ஆர். என். நெளசாட், கிண்ணியா மொஹமட் மாலிக், எஸ். எச். நிஹ்மத், மசூரா ஏ. மஜீத் போன்ற எழுத்தாளர்களின் பெயர்கள் தவறுதலாக விடுபட்டிருந்தன. இத்தகைய எழுத்தாளர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் வெளிவரும் நாடகம் தொடர்பான ஆய்வு எந்தவிதத்திலும் பூரணத்துவம் பெறாது என்பதை முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றோம்.

அத்துடன் ஏ. ஆர். எம். ஜிப்ரி, பரீன் அப்துல் காதர், பசீர், ஜோபு நசீர், எம். எஸ். அப்துல் லதீப், ஹலோ பெளமி, சிப்லி, முகமட் பெளசி, சீ. பீ. எம். தாஸிம், எச். யூ. தாஹிரா, பரீஸா ரஸ்மின், நிஹாரா சபூர்தீன், இர்ஷாட் கமால்தீன், ஹுசைன் பாருக், சீ. எம். பீ. மொஹிதீன், பரீதா இஸ்மாயில் யுனுஸ், கே. ரஹ்மான், யு. எல். யாக்கூப், ஏ. எல். ஜபீர், எம். எம். ஹுசைன், ஜோபு நkர், மற்றும் மொஹம்மட் பக்கீர் போன்ற கலைஞர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நாடகத் துறையில் ஆர்வம் உள்ள பலர் நமக்கு இந்தப் பெயர்களை ஞாபகமூட்டித் தந்தனர்.

இன்னும் சிலரின் பெயர்களும் விடுபட்டிருக்கலாம். இஸ்லாமியக் கலைவடிவமாக நமது மூதாதையர்கள் வளர்த்தெடுத்த நாடகம் என்கின்ற கலையை மீண்டும் உயிர்ப்பிக்கும் எமது பணியில் சேர்ந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk