புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.

அசின் - டோனி காதலா - கதையா?

அசின் - டோனி காதலா - கதையா?

இது வரை லட்சுமிராய் பக்கம் வீசிக் கொண்டிருந்த டோனி காற்று இப்போது அசின் பக்கம் வீச ஆரம்பித்து விட்டது என்கிறார்கள் பாலிவுட்டில் பரபரப்பாய்.

லட்சுமிராய்க்கும் தனக்கும் இனம் புரியாத நெருக்கம் என்றும் அது காதலா இல்லையா தெரியாது என்றெல்லாம் தத்துவஞானிகளுக்கு மட்டுமே புரியும் வகையில் பேசி வந்தார் டோனி. டோனி சென்னை வந்தால் லட்சுமிராயுடன் தான் விருந்து சாப்பிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அசினுடன் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தாராம் டோனி. அவ்வளவுதான். அன்று முதல் பிஸின் மாதிரி டோனியுடன் ஒட்டிக் கொண்டாராம் அஸின்.

இருவரும் செல்லில் மணிக்கணக்கில் பேசுவது என்று தொடங்கிய பழக்கம், பிறந்த நாளுக்கு அசினை தனியாக அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. அத்துடன் நிற்கவில்லையாம் இப்போது.

இந்த நெருக்கம் இருவரையும் காதலில் பிணைத்து விட்டதாக பரபரப்புடன் பேசுகிறார்கள் பாலிவுட்டில்.

 


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk