புலம்பெயர் இலக்கியம் சிங்கப்பூரில் இருந்து வீறுகொண்டெழும்
புலம்பெயர் இலக்கியம் சிங்கப்பூரில்
இருந்து வீறுகொண்டெழும்
சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதையின் செழுமையான வளர்ச்சிக்கும் செல்நெறிக்கும்
வித்திட்டவர்களாக அமரர் நா. கோவிந்தசாமி, அமரர் ந. பழநிவேலு, அமரர் காத. பெருமாள்,
புதுமைதாசன் பி. கிருஷ்ணன், சண்முகம் ஜே.எம்.சாலி சிங்கை, மா. இளங் கண்ணன்,
இராமகண்ணபிரான் போன்றோரைக் குறிக்கலாம். படைப்புக்கள், இலக்கியப் பணிகள், ஆளுமைகள்
பற்றிய பதிவுகளும் செய்யப்பட வேண்டும். முன்னோடிகளின் வரலாறுகளே பின்னால்
வருகின்றவர்களின் இலக்கியச் செயற்பாடுகளை செப்பனிட உதவும் ஆயுதங்கள்.
அந்த வகையில் கண்ணபிரான் மற்றும் நா. கோவிந்த சாமியின் இலக்கியப் பரிமாணம் பற்றிய
கட்டுரை ஒரு அருமையான உதாரணம். (காலச்சுவடு டிசம்பர் 2004)
இலங்கையில் பிறந்தவரும், எழுதுபதுகளின் பிற்கூறில் பொறியியல் கவ்விக்காக ரஷ்யா
சென்று, அங்கிருந்து பட்ட மேற்படிப்புக்காக கனடா சென்று உத்தியோக நிமித்தம்
சிங்கப்பூர்வாசியாகிவிட்ட மு.ந. மூர்த்தி ஒரு எழுத்தாளர் உடகவிய லாளர் சிங்கப்பூர்
தமிழ் இலக்கியம் பற்றிய அவருடைய கூற்று இது.
‘தொடக்கத்தில் சிங்கப்பூரில் எழுதிக் கொண்டிருந்தவர்கள் திராவிடக் கட்சியின்
தாக்கத்தால் எழுதியவர்கள், இவர்களிடம் தீவிர மொழிப்பற்று இருந்தது. அதற்குப் பிறகு
வந்தவர்கள் வைரமுத்து பாணியிலான கவிதை யுடன் உறவு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நவீன தமிழ் இலக்கியம்
பற்றியோ, நவீனப் போக்குகள் பற்றியோ தெரிந்து கொள்ளுவதற்கான சந்தர்ப்பம் இலக்கிய
ரீதியாக வும் சமூக ரீதியாகவும் உருவாகவில்லை.
ஆனால் இவர்களுக்கு மத்தியில்
காலஞ்சென்ற நா. கோவிந்தசாமியை மரியாதைக்குரியவராகச் சொல்ல முடியும். ஏனென்றால்
சமூகத்தை முன்வைத்து எழுதியவர்களில் மிக முன்மாதிரியாகக் காட்ட க்கூடிய ஒரே
எழுத்தாளராக அவர் இருந்தார்.
தமிழ் முரசில் எழுதி வருகின்றவர்களில் குறிப்பாக லதா; இந்திரஜித், போப்பு
போன்றவர்களை இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துபவர்களாகச் சொல்லலாம்.
விமர்சகர்கள் என்று சொல்லக்கூடிய இன்னொரு பகதியினரையும் குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டும். இதனுடைய தலைமைப் பொறுப்பை அரவிந்தனிடம் கொடுக்கலாம். அவரைப் பொறுத்தவரை
சிங்கப்பூரைப் பற்றியோ வெளி உலகம் பற்றியோ விரிவாகத் தெரிந்து கொண்ட ஒரு நூலகமாகவே
திகழ்கிறார். எந்த விடயம் குறித்தும் அவருக்குச் சுய கருத்து இருப்பது நான்
முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியது. இவரைப்போல் இன்னொருவர் பாஸ்கரன். அவர் மலேயா
பல்கலைக்கழகத்தில் பணபுரிந்த பின்பு சிங்கப்பூர் தொலைக்காட்சிச் செயதிப் பிரிவில்
நிறையக் காலம் வேலை செய்தவர்.
நாடகத்துறையில் இளங்கோவனைச் சொல்ல வேண்டும். சிங்கப்பூரை வெளிநாடுகளில்
பிரதிபலிக்கக் கூடிய ஒரே ஒருவராக இன்னும் கலை இலக்கியத்துறையில் இருந்து வருகின்றவர்.
சிங்கப்பூர்த் தமிழர்கள் இந்தியாவில் இருந்துதான் சென்றவர்கள் என்றாலும் கூட
அவர்களது வாழ்க்கை முறை நவீனமடைந்து விட்டது என்பது மறுக்க முடியாதது. பொருளாதாரத்தை
அடிப்படையாக வைத்துத்தான் வாழ்க்கை முறையும் உள்ளது.
நிலையான அரசியல், திட்டமிடப்பட்ட பொருளாதாரம், முதலியவை அவர்களது சமூகத்தைக்
காப்பாற்றி வருவதால் வாழ்வின் முழுக்கவனம் ¦¡ருளாதார முன்னேற்றம் குறித்தே உள்ளது.
சிங்கப்பூர் தமிழர்கள் தமிழ் மொழி மீது அதீதப் பற்றுக்கொண்ட வர்கள். தமிழ் என்றால்
தூயதமிழாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். ஆனால் புதிய தலை முறையினர்
தமிழைப் பேசுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டிய சிக்கலான சந்தர்ப்பத்தில்
இருக்கின்றார்கள். கல்விக்கூடங்களில் தமிழ் ஒ பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது
என்றாலும் படிப்புத் தமிழ் வளத்தோடு இருப்பதாகச் சொல்ல முடியாது. இது ஒரு தற்காலிக
சூழலாகக் கூட இருக்கலாம்.
ஈழத்தமிழ் புலம் பெயர்ந்த பிற நாடுகளில் இருந்துதான் தமிழ் வளரும், வாழும் என்று
சொல்கின்றார்கள். அதைவிடவும் மிக வீச்சுடன் சிங்கப்பூரில் தமிழ் எழுச்சி பெறும்.
அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்...’
மு.ந. மூர்த்தியின் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இவை. (நேர்காணல்
காலச் சுவடு டிசம்பர் 2004)
சிங்கப்பூர் கவிமாலை அ¨மைப்பின் ஏப்பிரல் 2009 சந்திப்பின் போது கண்ணபிரான் இலக்கிய
ஆர்வம் மிக்க ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார். ‘நாம்’ என்னும் தனிச்சுற்றுக்கான
தொரு சிற்றிதழை வெளியிடும் இலக்கிய ஆர்வலர் பாண்டித்துரை அவர். ஈழத்துத் தமிழ்
இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அவரிடம் ஏராளமாக இருந்தது.
‘நாம்’ காலாண்டிதழின் நான்காவது இதழை என்னிடம் கொடுத்தார். அப்போது அதை ஒரு
நன்றியுடன் வாங்கி வைத்துக் கொண்டாலும், பிறகு வாசிக்கத் தோடங்கிய போது நிறையவே
விஷயங்கள் வெளிச்சமிட்டன. ‘நாம்’ இதழின் ஒரு இன்றியமையாத் தன்மையும், மற்ற
இதழ்களையும் பார்க்க வேண்டும் என்னும் ஒரு ஆவலும் முனைப்புற்றன. எந்த ஒரு
சமூகத்தினதும் இலக்கியத் தொகுதி வளர்ச்சியுறவும் செழுமை பெறவும் இலக்கியச்
சிற்றேடுகளின் தோற்றமும் செயற்பாடுகளும் முக்கியமானவை.
மு.ந. மூர்த்தி
ஓரிரண்டு இதழ்களுடனோ அறுமாதம் ஒரு வருடம் என்னும் குறுகிய கால இடைவெளிகளு டனோ அவை
இயங்க முடியாமல் நின்று போனாலும் அவை பதித்துச்செல்லும் தடங்கள் அழியாதவை. ஆழமானவை.
தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி சிறுசஞ்சிகைகள் இலக்கிய வளத்துக்காக ஆற்றியுள்ள
பங்கும் பணியும் அபரிமிதமா னவை. செய்திப் பத்திரிகைகளும், வானொலி, தொலைக்காட்சி
போன்ற ஊடகங்களும் இலக்கியத்துக்குக் களமமைத்துக் கொடுக்கும் செயற்பாடுகள் எங்கும்
உண்டுதான்.
ஆனாலும் இலக்கியம் ஒரு ஆளுமையுடன் நிலைபெற புதிய சிந்தனைகள், புதிய எழுச்சிகள்,
புதிய கருத்துக்கள், கருத்துமோதல்கள் விமர்சனங் கள் விவாதங்கள் போன்றவைகள்
அத்தியாவசியமானவை. இந்த அத்தியாவசியங்கள் இலக்கியச் சிற்றேடுகளாலேயே
நிறைவேற்றப்படக் கூடியன.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசியவர்கள், இலக்கியம் வளர்க்கும்
அமைப்புக்கள், செய்திப் பத்திரிகைகள், வானொலி தொலைக்காட்சி பற்றியெல்லாம்
பேசியுள்ளார்கள். ஆனால் சிங்கப்பூர்ச் சிறு சஞ்சிகைகள் பற்றிப் பேசக் காணோம்.
சிங்கப்பூரின் தமிழ் இலக்கியச் சூழலில் எப்படிச் சிறு சஞ்சிகைகள் தோற்றம்
கொள்ளாதிருந்தன, கொள்ளாதிருக்கக் கூடும்....!
கவிஞர் க.து.மு. இக்பால்
மு.ந. மூர்த்தியிலிருந்து, வி.டி. அரசு என்னும் வை. திருநாவுக்கரசிலிருந்து,
முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மியிலிருந்து எல்லாருமே சிங்கப்பூர்த் தமிழ்
இலக்கியத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டு விடுமோ என்று சின்னதாக ஒரு ஏக்கம்
காட்டுகின்றனர். இலக்கியத்தேக்கங்கள் சிற்றேடுகளின் செயற்பாடுகளினாலேயே
உடைத்தெரியப்படும்.
சிங்கப்பூரில் சிறு சஞ்சிகைகளே இல்லையோ என்னும் என்னுடைய ஏக்கம் கூட நண்பர்
பாண்டித்துரையின் ‘நாம்’ என்கின்ற சஞ்சிகை அன்பளிப்பின் மூலம் இல்லாமல் போயிற்று.
இந்த நான்காவது ‘நாம்’ இதழ் 2009 இன் ஜனவரி- மார்ச் காலாண்டுக்குரியது. அட்டைப்படமே
ஒரு சிறுசஞ்சிகையின் அடையாளத்துடன் திகழ்கின்றது. காலச்சுவடு, அளவில் கறுப்பு
வெள்ளையில் மிளிர்கின்ற காலாண்டு இதழ் ‘நாம்’
நான்காவது இதழ் மலருமா என்ற மனச் சங்கடத்திற்கிடையே நண்பர்கள் சிலர் தந்த நம்பிக்கை
புத்துணர்வைத் தந்திருப்பதாக ஆசிரியருரை பேசுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட
பக்கங்களில் நிறையவே கவிதைகள், நான்கு சிறுகதைகள், இரண்டு நேர்காணல்கள்,
திறனாய்வுகள், கட்டுரைகள் இலக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் நிழற்படங்கள்
என்று நம்மை நிறையவே தன்னுள் ஆழ்த்திவைத்துக் கொள்கிறது நாம். புரட்டியதுமே
முதற்கவிதை ‘துரோகிக்கும் நன்றி கூறும் ஒரு வித்தியாசத்துடன்.... படைப்பாளி யார்
என்று கவனிக்கையில் மாவனல்லை எம். ரி. ஷான் ஷெரீப் என்று நம்மூர்க் கவிஞன்.
சந்தோஷமாக இருந்தது.
இராம வயிரவன் சிங்கப்பூர். அய்யப்ப மாதவன், எம். கே. குமார்- சிங்கப்பூர் வாசுதேவன்
ஆகிய நால்வரின் சிறுகதைகள், ‘நாமை’க்கனம் பண்ணுகின்றன.
துபாயிலிருக்கும் சிற்றேட்டுப் பிரியரும், கவிஞருமான அய்யனார், ‘பழங்காசு’ என்னும்
புதுமையான பெயருடனான சிறு சஞ்சிகை ஒன்றினை 2001 லிருந்து வெளியிட்டுவரும் வரலாற்று
ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோருடனான இரண்டு அருமை மிகு நேர் காணல்கள் நிறையவே தகவல்கள்
தருகின்றன.
ஒரு அரைநூற்றாண்டு காலம் சிங்கப்பூரின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் பின்னிக்கிடந்த
ஒரு தமிழ் ஆளுமையான வை. திருநாவுக்கரசுவின் அமரத்துவம் பற்றியும் அஞ்சலிக்கிறது
இவ்விதழ்.
தங்கமீன் பாலுமணிமாறன், கவஞரும் ஊடகவியலாளருமான இந்திரஜித் ஆகியோரும் அமரர்
திருநாவுக்கரசு பற்றி குறித்துள்ளனர்.
‘எல்லோரையும் போலவே அரசுவும் இரண்டு விதமான மனிதர்தான். லீகுவான் கியூ பற்றி
முன்பொருதடவை இவர் கூறிய கருத்து இவருக்கும் பொருந்தும். ‘எதிர்ப்பவர்களிடம்
தீவிரமான கடுமை காட்டும் அதே நேரம் ஆதரிப்பவர்களிடம் அதே தீவிரத்துடன் மிகுந்த
அன்பும் கருணையும் காட்டினார். என்னும் இந்திரஜித்தின் வரிகள் மனதைத் தைக்கின்றன.
இந்திரஜித் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் புதிய நம்பிக்கைகளில் முக்கியமானவர்.
சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றும் இவருடைய
கவிதைகடளங்கிய நூல் சுனைவிடும் மூச்சு. ஆசியான் விருது பெற்ற கவிஞர் க.து.மு.
இக்பாலின் இரண்டு கவிதைத் தொகுதிகள் பற்றி ஷநாவாஸ் எழுதியுள்ளார். சிங்கப்பூர்க்
கவிஞர் மாதங்கியின் ‘நாளை பிறந்து இன்று வந்தவள்’ என்னும் கவிதைத் தொகுதி பற்றி
மும்பை புதிய மாதவி அறிமுகக் குறிப்பெழுதியுள்ளார்.
இலக்கிய முன்னோடி இராம கண்ணபிரானை ‘நாமும்’ சிங்கப்பூரின் நாடகக்கலைஞரும்
எழுத்தாளருமான பெ. த. இராசனை ‘நாமில்’ கண்ணபிரானும் அறிமுகம் செய்து வைக்கின்றனர்.
மலேசிய சிற்றிதழ் வல்லினத்தில் வெளிவந்த சிங்கப்பூர் எழுத்தாளர் சுப்பிரமணியம்
ரமேஷின் கண்டடைதல் கதை பற்றி பாண்டித்துரை; நதியலை; மாதங்கி; அய்யனார் ஆகியோர்
உரையாடியுள்ளனர்.
ஒரு படைப்பு பற்றிப் பேசுதல் என்பது மிக முக்கியமானது. அதையும் நாம் செய்துள்ளது.
பாலு மணிமாறன், சின்னப்பாரதி, பாண்டித்துரை கே. பாலமுருகன், அய்யப்ப மாதவன் என்றும்
சிங்கப்பூர், மலேஷியா தமிழ்நாடு என்றும் கைகோர்த்து நிற்கும் துணைகளுடன் நாம்
நம்பிக்கையுடன் செயற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவேபடுகிறது.
நாம் என்னும் பெயர்பற்றி யோசித்தேன். அவராகவோ இவராகவோ இருக்க முயல்வதை விட நாம்
நாமாகவே இருப்பது சாலச்சிறந்தது என்பதை பாலுமணி மாறனின் நாம் பற்றிய நாலு வார்த்தை
சொல்லிச் சென்றது.