எம்.எஸ். எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடையே வித்தியாசத்தைக் கண்டறிவதெப்படி?
எம்.எஸ். எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடையே
வித்தியாசத்தைக் கண்டறிவதெப்படி?
எம். எஸ். எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடையே உள்ள நாட்களின் வித்தியாசத்தை
ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும்
இரண்டு திகதிகளுக்கிடையே உள்ள வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில்
எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழிமுறை எக்ஸலில் உள்ளது.
இதற்கு எக்ஸலில் உள்ள
Datedif எனும் பங்க்ஸ்ன் (function)
பயன்படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி) 1,
திகதி 2, விடை காண வேண்டிய வடிவம்) {= ளிதிஹிரிளியிபி (DATEDIF (Date1, Date 2.
Output Requirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். Output Requirement)}
எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே “Y” என வழங்கும் போது வருட
வித்தியாசத்தையும் “M” என வழங்கும் போது மாதங்களின் வித்தியாசத்தையும் “D” என்பது
நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி 1 ஐ விட திகதி 2 பெரிதாக இருக்க
வேண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
உதாரணமாக 8.8.1990 எனும் திகதிக்கும் 13.05.2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை
வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில்
எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08.08.1990 எனும் திகதியையும் B4 எனும்
செல்லில் 13.05.2008 எனும் திகதியையும் உள்Zடு செய்யுங்கள்.... திகதியை உள்Zடு
செய்யும் போது உங்கள் கணினியில் திகதி உள்Zடு செய்யும் வடிவத்தையும் (Date
format) கவனத்திற் கொள்ள மறந்துவிடாதீர்கள். அனேகமாக விண்டோஸில் MM/DD/YYYY
(மாதம்/திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்.
அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையில் உள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய
B6 எனும்
செல்லில் =DATEDIF (B3, B4, “Y”) எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள்.
விடையாக 17 வருடங்கள், வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள
மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF (B3, B4, “M”)
எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF (B3, B4, “D”) எனவும் வழங்குங்கள்.
இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய
வேண்டுமானால் மேற்சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வேண்டும்.
உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய
திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF (B2, B3, “Y”) எனும் சமன்பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே
B6
எனும் செல்லில் =DATEDIF (B2, B3, “YM”) என வழங்குங்கள். வருடங்கள்
நீங்கலாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF (B2, B3, “MD”) எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து
நாட்களின் வித்தியாசம் மாத்திரம் கிடைக்கும்.
இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது ...., வருடங்கள் ....,
மாதங்கள் ...., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும்
பங்ஸனையும் பிரயோகிக்க வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமானத்தை டெக்ஸ்டாக மாற்றி
விடுகிறது.
அதற்கு வேறொரு செல்லில் = ‘இன்று உன் வயது’ “ & TEXT (B5, “0”) & ‘வருடங்கள்,
“ “ & TEXT (B6, “0”) & ‘மாதம், “ & TEXT (B7, “0”) & ‘நாட்கள்’ என
வழங்குங்கள். இன்று உன் வயது 19 வருடங்கள், 1 மாதம், 19 நாட்கள். எனும் விடையை
எக்ஸல் காண்பிக்கும்.
எதற்கு இந்த Package for CD?
எம். எஸ். பவர்பொயிண்ட், ப்ரசண்டேசன் ஒன்றை அந்த ப்ரசண்டேசனுக்குரிய அத்தனை துணை
அம்சங்களுடனும் சீடியில் பிரதி செய்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது
Package for CD எனும் கட்டளை. அதாவது பவர்பொயின்டில் உள் Package for CD எனும்
வசதியின் மூலம் ஒரு ப்ரசண்டேசனில் பயன்படுத்திய படங்கள் (Images) , ஒலி
(Sound) வரைபுகள் (charts) எழுத்துரு (fonts) போன்றவற்றை ஒரே பைலாக
சேமித்துக்கொள்ள முடியும். இதன் மூலம் ஒரு ப்ரசண்டேசனை வேறொரு கணினிக்கு இலகுவாக
மாற்றிக்கொள்ள முடிவதோடு பவர்பொயிண்ட் நிறுவப்பட்டிராத கணினிகளிலும் அதனை இயக்கிப்
பார்க்கக் கூடிய வசதியை தருகிறது. அத்தோடு ப்ரசண்டேசன் ஒன்றை நகலெடுத்துப்
பாதுகாக்கவும் (backup) முடிகிறது. எம். எஸ். பவர் பொயிண்ட் 2003 ற்கு முன்னைய
பதிப்புக்களில் இதற்கு Pack and Go எனப் பெயரிடப்பட்டிருந்தது.
Package
for CD எனும் இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்த பின்வரும் வழி
முறையைக் கையாளுங்கள்.
முதலில் File மெனுவில் Package for CD எனும் கட்டளையைத் தெரிவு
செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு Name the CD
எனுமிடத்தில் சீடியிற்கு ஒரு பெயரை வழங்குங்கள்.
அடுத்து அதே டயலொக் பொக்ஸில் Add Files பட்டனில் க்ளிக் செய்து உரிய
ப்ரசண்டேசன் பைலைக் காட்டி விடுங்கள். விரும்பினால் Options பட்டனில் க்ளிச்
செய்வதன் மூலம் ப்ரசண்டேசன் பைலிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் வேறு
பைல்கள் மற்றும் எழுத்துருக்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு
அதிகாரமற்றவர்கள் எவரும் அந்த ப்ரசண்டேசனை இயக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியா
வண்ணம் கடவுச்சொல் ஒன்றை வழங்கவும் முடியும்.
அடுத்து Copy to CD யில் க்ளிச் செய்வதன் மூலம் அதனை நேரடியாக சீடியில் பதிவு
செய்து கொள்ளலாம் அல்லது Copy to Folder க்ளிச்செய்து இந்த பைலை ஹாட் டிஸ்கில்
விரும்பிய ஒரு போல்டரில் சேமித்து விட்டு பின்னர் சீடியில் பதிவு செய்துகொள்ளவும்
முடியும்.