புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

.

வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு

வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு

நிவாரணக் கிராமங்களில் தங்கி யுள்ள மக்கள் பற்றிய எதிர்க் கட்சியினரின் ‘கரிசனை’ இப் போது நாளுக்கு நாள் அதிகரி த்து வருகின்றது.

இதில் விசேடம் என் னவென்றால் அங்கே என்ன நடக்கின் றது என்பதை அறிய விரும்பாமலே இவ ர்கள் தங்கள் கரிசனையை வெளிப்படுத் துவது தான்.

தாங்கள் நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல விடாமல் அரசாங்கம் தடைசெ ய்கின்றது என்று எதிரணித் தலைவர்கள் குற்றஞ் சாட்டுகின்றார்கள்.

அதே நேரம் நிவாரணக் கிராமங்களில் அப்படி நடக் கின்றது இப்படி நடக்கின்றது என்று ஊடகவியலாளர் மகாநாடுகளிலும் விசேட அறிக்கைளிலும் கூறுகின்றார்கள்.

நிவா ரணக் கிராமங்களுக்குச் செல்ல அனும திக்கவில்லை என்று ஒருபுறத்தில் குற்ற ச்சாட்டு. அங்கே முறைகேடுகள் இடம் பெறுவதாக மறுபுறத்தில் கண்டனம். வேடிக்கையாக இருக்கின்றது.

நிவாரணக் கிராமங்களுக்குச் செல்வத ற்குத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று இத் தலைவர்கள் நீதிமன்றத்து க்கு மனுச் செய்திருந்தார்கள்.

அங்கே என்ன நடக்கின்றதென்பதை அறிவதற்கான தங்கள் உரிமை மறுக்கப்படுகின்றது என்று அந்த மனுவில் கூறியிருந்தார் கள். நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல முடியாததால் அங்கே என்ன நடக்கின் றது என்பதை அறிய முடியவில்லை என்பதே இதன் அர்த்தம்.

இந்த நிலை யில், நிவாரணக் கிராமங்களில் முறை கேடுகள் இடம்பெறுவதாகவோ குறை பாடுகள் இருப்பதாகவே இவர்கள் கூறுவதிலுள்ள நம்பகத் தன்மை கேள் விக்கு உள்ளாகின்றது. நிவாரணக் கிரா மங்களை வைத்து அரசியல் நடத்த முய ற்சிக்கின்றார்கள் என்பதே உண்மையான நிலை.

நிவாரணக் கிராமங்களுக்குப் போகாமலே இப்படி அரசியல் செய்ப வர்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக் கப்பட்டால் என்ன செய்வார்கள் என்ப தைச் சொல்லத் தேவையில்லை.

சர்வதேச அமைப்புகளில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக இவ ர்கள் நடந்து கொள்கின்ற போதிலும் சர்வதேசத்துக்கு உண்மை நிலை இப் போது மெல்ல மெல்லப் புரிகின்றது.

உள்ளக இடம்பெயர்வோரின் மனித உரி மைகளுக்கான ஐ.நா. செயலாளர் நாய கத்தின் பிரதிநிதி வால்டர் கலின் அண் மையில் நிவாரணக் கிராமங்களுக்கு விஜ யம் செய்து அங்கு தங்கியுள்ள மக்களு டன் உரையாடிய பின்னர் வெளியிட்ட கருத்தை எதிரணித் தலைவர்கள் நிதான மாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

அங்குள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகளையும் அவர்களின் உரிமைகளைப் பேணுவதற்கு மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கைகளையுமிட்டுத் திருப்தி அடைந்துள்ளதாக அவர் ஊட கங்களுக்குத் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்துக்கும் அது வரை அம் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அரசாங் கம் முன்னுரிமை அளித்துச் செயற்படு கின்றது.

அர்ப்பணிப்புடன் கூடிய இப் பணியை அரசியல் லாபத்துக்காகக் கொச்சைப்படுத்தாமல் நேர்மையான அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரணித் தலைவர்கள் முன்வர வேண்டும்.

தேர் தல் தோல்விகளால் துவண்டுபோயிருக் கும் எதிர்க்கட்சி இடம்பெயர்ந்த மக் களை முறைகேடாக மூலதனமாக்கிக் கரையேற முயற்சிப்பது அநாகரிக அர சியல். இது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk