|
|
 | ௧வீதைப் பூங்கா . | | |
|
|
இனி...

இனி...
ருசியற்ற உணவாய்
இன்னும் இளைத்து
நாட்கள் பதுங்கி
சென்ற பின்பும் மனசில் குறிக்கோள்
உயிருள்ளதாய்
மனதில் வளர்க்கத்தான்
செய்கிறேன் ஒரு
பட்டாம் பூச்சியாய் அடைத்துத்தான்
வைக்கிறேன்!
ஆனாலும் செத்துத்தான் இலட்சியம்
எப்போது விழும் என்று
தொங்கியபடி வாழ்க்கை...
தாமரை இலை நீர்போல்
அங்குமிங்கும்
தள்ளாடுகிறது வாழ்க்கையோடு
இதயமும்...
இனி.. இதயத்தை
விழித்துக் கொண்டு பயணிக்கிறேன்
ஒரு உறுதியான இலட்சியத்தோடும்
நம்பிக்கையோடும்,
எனக்காய் நாளை காத்திருக்கும்
வெற்றிக்காய்...
எச்.எம்.எம். பாஹிம்,
இறக்காமம்
நான்...
நட்புலகத்தை
அழித்து விட்டது
அந்தக் கொடூரக் காற்று
தனிமையாய் நிற்கிறது
இந்த ஒற்றை மரம்
நான் என்ற
சொல்லில்...
ஏ.ஆர். றிஸான்,
கிண்ணியா
கவிதை - கற்பனை
கற்பனை வலையை
கொஞ்சம்
விரித்தால்
சிக்கிக் கொள்ளும்
மீன்கள்
அஸ்கா நிஸார்,
பதிங்கஸ்கொடுவ
சோறு
கொதிக்கும் உலையில்
குதித்து
தன்னை தியாகம் செய்தது
பசி போக்க
அரிசி
ஸாஹிரா நாஸிர், கண்டி
பார்வை
உனக்கென்ன
ஓர் பார்வையை
தீயாய்
வீசி விட்டுச் செல்கிறாய்
என் உள்ளமல்லவா
மெழுகு வர்த்தியாய்
உருகி வடிகிறது!
சபானி ஆப்தீன்,
மடிகே மிதியால

உரமிடுங்கள்
பூங்கா மண்ணுக்கு
உயர்ந்திடுமே
புகழும் விண்ணுக்கு
தூக்கும் வரை
நீங்கள் பல்லாக்கு
குறைவதில்லை
எங்கள் செல்வாக்கு.
பொறாமை
முடவன்
சவாரி செய்யும்
நொண்டிக் குதிரை
பலவீனன்
பயணிக்கும்
கோணல் பாதை
சாம்பேறியின்
சிம்மாசனம்
கோழையின்
ஊன்று கோல்
தனக்கு மட்டும்
கணக்கு போடும்
சுய டயறி
நட்பை
உறவை
மனித நேயத்தை
அறுத்தெறியும்
கூராயுதம்
மனசுகளை
மலடாக்கும்
அணு குண்டு
கும்பலங்கை
பெளசுல் கரீமா ஹமீத்
மின்னல்
நீல வானம்
நீண்ட நாட்களின் பின்
பூமித் தாயை
புகைப்படம் பிடிக்கிறது
றுவாஹா சத்தார்
வெலிகம
|