புத் 62 இல. 37

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1430 ரமழான் பிறை 23

SUNDAY SEPTEMBER 13, 2009

 
.
பணம் சம்பாதித்த மோசடிக்காரர்கள்

முதியோரை இம்சைப்படுத்தி

பணம் சம்பாதித்த மோசடிக்காரர்கள்

பெற்றோர் அல்லது முதியோரை கண்ணியப்படுத்தல், கீழ்ப்படிதல், உதவுதல், பாதுகாத்தல் என்பது உயரிய பண்பாகும். சிலர் இதனை கடமையாகவும் கொண்டுள்ளனர். முதியோருக்கு உணவளித்து பாதுகாப்பது எல்லா சமயங்களிலும் புண்ணிய கருமமாக கணிக்கப்படுகிறது.

இப்பேர்ப்பட்ட நிலையில் முதியோரை இம்சைப்படுத்தி பட்டினியில் வாடவைத்த ஒரு பிரிவினரும் இருந்துள்ளது பண்டாரகமையிலிருந்து தெரியவந்தது. இவையொரு சோகச் சம்பவமாகும்.

‘ரணசிங்க’ என்பவர் பண்டாரகமை கொலமெதிரிய பிரதேசத்துக்கு முதலாவதாக வந்தது முதியோர் இல்லமொன்றை நடத்தும் அபிப்பிராயத்துடனாகும். முதியோர் இல்லத்தை சமூக சேவை நிலையமாக பதிவு செய்யும் நோக்குடன் 1999 ஆம் ஆண்டு பிரதேச செயலகத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இவ்விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் பொறுப்பு பிரதேச செயலக சமூக சேவை அதிகாரி ரி. சி. ஜயவர்தனவை சார்ந்ததாயிருந்தது.

முதியோரிருந்த வீடு

‘முதியோர் இல்லத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தோர். அதற்குண்டான படிவங்களை பூர்த்தி செய்திருக்கவில்லை. நான் அவ்விடத்தை நேரில் காணச் சென்ற போது முதியோரை கண்காணிப்பதற்கிருந்தோர் மது அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

விண்ணப்பம் உசிதமானல்ல, தகுதியற்றது என என் அறிக்கையில் தெரிவித்தேன் என சமூக சேவை அதிகாரி ரி. சி. ஜயவர்தன தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, பிறகு இவர்கள் இதனை வியாபார நிலையமாக பதிவு செய்து அங்கு பன்னிரெண்டு, பதினான்குக் கிடைப்பட்ட தொகையினர் இருந்தனர்.

முதியோரை கவனிக்க மூன்று நிரந்தர ஊழியர்களும் இரு தற்காலிக ஊழியர்களுமிருந்தனர். முதியோரை கவனிப்பதற்கு ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பணத்தொகை பெறப்பட்டது. அதிக நாட்கள் செல்லவில்லை. பிரதேச வாசிகளிடமிருந்து எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. முதியோரை கவனிப்பதற்கு பணம் பெறும் இவர்கள் முதியோரை கவனிப்பதில்லை எனவும் சப்தமிட்டு அவர்கள் அச்சுறுத்துவதாகவும் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலையிலுள்ள மூதாட்டி

இதையடுத்து நாம் பல முறை விசாரணைக்குச் சென்று நிர்வாகிகளை எச்சரித்து ஆலோசனை வழங்கினோம். பலனேற்படவில்லை. 2002 ஆம் ஆண்டு பிரதேச வாசிகள் இவை பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதிலும் பலனில்லை. இல்லத்தை நடத்துபவர்கள் அசட்டையாயிருந்தனர்.

முதியோரை பராமரிப்பதற்காக அவர்களை ஒப்படைப்பவர்களிடமிருந்து மாதம் மூவாயிரம் ரூபா சிலரிடம் ஐந்தாயிரம் ரூபா பெறப்பட்டுள்ளது. சிலர் அவர்களது மாதாந்த ஓய்வூதியப் பணத்தை முதியோர் இல்லத்துக்கு மாற்றியுள்ளனர். சிலர் தமது காணிகளை இல்லத்தின் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளனர். விசாரணைகளின் பின் இவர்களது வியாபார அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ய வேண்டியிருந்தது.

இதன் பின்னரும் இந்நபர்கள் இவ்வில்லத்தை நடத்தியுள்ளனர். மீண்டும் பிரதேச வாசிகளிடமிருந்து முறைப்பாடு கிடைத்தது. இம்முதியோரில்லத்தை நடத்தியவர் பாதுகாப்பு சேவையிலிருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரியொருரென்பதை மறைத்து செயல்பட்டுள்ளார். இதனால் சில பிரதேச வாசிகள் இவரினால் பிரச்சினையேற்படலாமென்பதால் தகவல் தெரிவிக்க அச்சப்பட்டுள்ளனர் என சமூக சேவை அதிகாரி தெரிவித்தார்.

ஜேன் நோனா

‘ஐயோ மகனே எங்களுக்கு ஒழுங்காக உணவு கிடைப்பதில்லை, குளிப்பதற்கு நீரில்லை, பசிக்கும் போது உணவு கேட்போம் அப்போது எங்களுக்கு கிடைப்பது தலையில் குட்டுதான். கடினப் போக்குடைய இவர்கள் எங்கள் வயோதிபத்தையும் பாராது ஓங்கி குட்டுவார்கள். சிலவேளைகளில் எங்களை ஒவ்வொருயிடத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என ஒரு மூதாட்டி தன்னிடம் தெரிவித்ததாக அவ்வதிகாரி கூறினார்.

இம்முதியோர் இல்லத்தைப் பற்றி பிரதேச வாசிகளின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க நடத்துநனரான ரணசிங்க குழுவினர் முதியோர்களை இங்கிரிய கொக்ஹேன என்ற இடத்துக்கு எடுத்துச் சென்று மிகவும் பழைமைவாய்ந்த உடைந்த முழுமை பெறாத வீடொன்றில் தங்க வைத்தனர்.

முதியோர்களுக்கு சாப்பிடுவதற்கு, குடிப்பதற்கு ஒழுங்கான உணவு கிடைக்காத போதும், முதியவர்களை ஒப்படைத்தவர்களிடமிருந்து மாதாந்தம் பெறப்படும் பணத்தொகையை தவறாது பெற்றனர். மாதாந்தம் பெறப்படும் தொகைக்கு மேலதிகமாக அடிக்கடி நடத்துநர்களால் விநியோகிக்கப்படும் உதவி ரிக்கட்கள், உதவி கோரும் படிவங்கள் மூலம் முதியவர்களின் பொறுப்பாளர்களிடம் பணம் சேகரித்து வந்தனர்.

இங்கிரிய பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் அங்குள்ள சமூக சேவை அதிகாரியின் கவனத்துக்குள்ளானது. இதனையடுத்து சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். உடைந்த வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த ஏழு அல்லது எட்டு முதியவர்கள் உறவினர்களிடமும் அரச முதியோர் இல்லத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.

பொறுப்பதிகாரி சார்ள்ஸ் விக்கிரமசிங்க

விபரங்கள் பெற முடியாத மூன்று வயோதிபர்களிருந்தனர். சந்தேக நபர்களுக்கெதிராக ஹொரணை நீதிமன்றில் வழக்கொன்றிருந்தது. மீதியுள்ள முதியோர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டுமென நீதிமன்றில் முடிவு செய்யப்பட்டது. இச்சமயம் சந்தேக நபர்கள் மிகுதியான மூன்று முதியவர்களை பண்டாரகமையிலுள்ள முன் கூறப்பட்ட இல்லத்தில் தவிக்கவிட்டுச் சென்றுள்ளனரென சமூக சேவை அதிகாரி ரி. சி. ஜயவர்தன தெரிவித்தார்.

பண்டாரகமை முதியோர் இல்லத்துக்கு அருகில் வசிக்கும் திலகரத்ன பின்வருமாறு கூறுகிறார், இங்கிருந்து முதியோர்களை அழைத்து சென்ற பிறகு இவ்விடம் செடிகள் வளர்ந்து பாழமைந்து காணப்பட்டது. அச்சமயம் சந்தேக நபரும் ஒரு பெண்ணும் இங்கு வந்து கூரை, கதவுகளை அகற்றி எடுத்துச் சென்றனர். இங்கு நீரில்லை விளக்கில்லை, வாழ்வதற்கு உகந்த இடமல்லவிது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பகலில் முன் கூறிய அப்பெண் முச்சக்கர வண்டியில் வந்து இம்மூன்று தாய்மார்களையும் இங்கு விட்டுச் சென்றார். அதன் பிறகு வரவில்லை. எம்மால் இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாம் இம்மூன்று முதியவர்களையும் கவனித்து உணவளித்து வந்தோம். நாம் எம் தாய் போன்று கவனிக்கும் போது அம்மூவரும் அழுதனர். இவ்வாறு ஒருநாள் அப்பெண் முதியவர்களை பார்க்க வந்த போது எதிர்ப்புகள் வளரவே அவர் சென்று விட்டார்.

இதனை நாம் சமூக சேவை அதிகாரிக்கு தெரியப்படுத்தினோம். இவை பற்றி பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பண்டாரகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘சார்ள்ஸ் விக்கிரமசிங்க’ ஸ்தலத்துக்கு வந்து சமூக சேவை அதிகாரி ஜயவர்தனவின் உதவியுடன் முதியவர்களை ஒப்படைக்க தகுதியானவர்களை தேடினார். இம்மூவர் பற்றி முதலில் அறிந்து கொள்வது முதல் கடமையாகும். ஒரு வயோதிபத் தாய் பேசும் சக்தியை பெற்றிருந்ததால் அவரை உறவினரிடம் ஒப்படைத்தோம்.

மற்றை இருவரில் ஒருவருக்கு பேசும் சக்தியில்லாததால் தகவல் அறிய முடியவில்லை அவரை வைத்தியசாலையில் அனுமதித்தோம். எண்பது வயதுடைய மற்ற மூதாட்டி சொன்னார். தன் பெயர் ஜேன் நோனா வென்றும் ஊர் மெதகம என்றும் இத்தகவலையடுத்து பொலிஸ் ரி!8யிrதில் இவரை அழைத்துச் சென்று முழு நாளும் தேடி ஒரு உறவினரை கண்டுபிடித்து அவரிடம் இம்மூதாட்டியை ஒப்படைத்தோமென்றார்.

பொறுப்பதிகாரி. இம்முதியோரில்லத்தை நடத்திய சந்தேக நபர் இங்கிரியவைச் சேர்ந்தவரென தகவல் கிடைத்துள்ளது. இவரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி சார்ள்ஸ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இவ்வில்லத்தின் அதிக வயதுடையவரான ஜேன் நோனா 1930 ஆம் ஆண்டு பிறந்தவர் தூரத்து உறவினரான அமரதுங்ககே ரஸலின் நோனாவென்பவர் இவரை அப்போது கவனித்து வந்தார். மிகவும் நெருங்கிய உறவினர்கள் இவரை ஏற்றுக் கொள்ளாததால் ஐந்து வருடங்களுக்கு முன் கொலமெதிரிய முதியோர் இல்லத்தில் சேர்ந்தோம். சேர்க்கும் போது இவரது மரணச் செலவென்று முப்பதாயிரம் ரூபாவை எம்மிடமிருந்து இல்லத்தை நடத்துபவர்கள் பெற்றனர். இவை போக மாதாந்தம் ஆயிரத்து ஐநூறு ரூபா செலுத்தினோம் இத்துடன் நின்றுவிடவில்லை.

அடிக்கடி நிதியுதவி கேட்டு ரிக்கட், புத்தகங்கள், படிவங்களை அனுப்பி ஐநூறு, ஆயிரம், ஆயிரத்து ஐநூறு ரூபா தொகையினை எம்மிடமிருந்து சேகரித்தனர். சில வேளைகளில் வீட்டுக்கு வந்து பணம் பெற்று சென்றுள்ளனர்.

இவரை யார் கவனிக்கா விட்டாலும் நாம் கவனிப்போம். எனக்குப் பிள்ளைகள் தரும் பணத்தை இவருக்காக செலவழித்தேன். நன்மைகள் தேடி இதனை நான் செய்தேன். முதியோர்களுக்கு இம்சைப்படுத்தியோர் தண்டிக்கப்பட வேண்டுமென கூறினார் ரஸிலின் நோனா. இவரது பாதுகாப்பில் ஜேன் நோனாவுள்ளார். பேசும் சக்தியிழந்த பண்டாரகமை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வயோதிப தாய் பற்றி அறிந்தவர்கள் பண்டாரகமை பொலிஸ் நிலையத்துக்கு அல்லது சமூக சேவை அதிகாரிக்கு தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

எம். எப். ஜெய்னுலாப்தீன்

 

 

 

 


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk