புத் 62 இல. 37

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1430 ரமழான் பிறை 23

SUNDAY SEPTEMBER 13, 2009

.

இடம்பெயர்ந்த மக்களை வைத்து அரசியல் நடத்துவது அநாகரிகம்

இடம்பெயர்ந்த மக்களை வைத்து அரசியல் நடத்துவது அநாகரிகம்

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 9994 பேர் நேற்று முன்தினம் அவர்களின் சொந்த இடங்க ளுக்கு விசேட பஸ் வண்டிகள் மூலம் அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக் களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந் தவர்கள்.

தனிப்பட்ட காரணங்களுக்காக வன்னிக்குச் சென்றிருந்த வேளையில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவ ர்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக் குத் தெரிவு செய்யப்பட்ட 74 மாணவ ர்களும் இவர்களுள் அடங்குவர். முன்ன ரும் ஒரு தொகையினர் நிவாரணக் கிரா மங்களிலிருந்து இம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமகால அரசியலில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிவா ரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டு ள்ளவர்கள் புலிகளின் பிடியில் சிக்கிச் சில காலம் சொல்லொணாத் துயர் அனுபவித் தவர்கள். புலிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள்.

அரசா ங்கம் புலிகளிடமிருந்து இம்மக்களை விடுவித்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைத்துப் பராமரிக்கின்றது. இவ்வாறு பராமரிப்பதில் இம்மக்களின் நலனும் நாட்டின் நலனும் சம்பந்தப்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெ யர்ந்த மக்கள் உடனடியாகத் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாத அளவுக்கு அங்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிரு க்கின்றன. அப்பிரதேசங்களில் கண்ணி வெடிகளை முற்றாக அகற்றிய பின்னரே இம் மக்கள் அங்கு குடியேற முடியும்.

முப்பது வருட காலமாகப் புலிகள் நாட்டுக்குப் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காணும் முயற்சியும் இவ ர்களால் பாதிப்புக்கு உள்ளாகியது. மக்க ளோடு மக்களாகப் புலிகள் நிவாரணக் கிராமங்களுக்குள் ஊடுருவியிருக்க மாட் டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஊடுருவியிருக்கும் புலிகளைக் கண்டறி வதற்கான ஆய்வுச் செயற்பாடுகளில் படை யினர் ஈடுபட்டிருப்பதாலேயே ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகின்றது. இது நாட்டின் நலன் சார் ந்த தேவை.

நிவாரணக் கிராமங்களில் உள்ள மக் களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதில் அரசாங்கம் கொண்டு ள்ள அக்கறையை நேற்று முன்தினம் இம்மக்களின் ஒரு பகுதியினர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்ப ட்டதிலிருந்தும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு முன்னுரிமை அளித் திருப்பதிலிருந்தும் விளங்கிக் கொள்ள லாம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களைத் தமது அரசியலுக்கு மூலதனமாக்கச் சில கட்சிகள் முயற்சிப்பது கவலையளிக்கின் றது.

நிவாரணக் கிராமங்களில் மக்களை ‘அடைத்து வைத்திருக்க வேண்டாம்’ என்று மக்களின் காவலர்கள் போலப் பேசுபவர்கள் புலிகள் இம்மக்களைத் தடுத்து வைத்திருந்த காலத்தில் மெளனம் சாதித்தார்கள்.

மக்களை மனிதக் கேடயங் களாகத் தடுத்து வைத்திருக்க வேண்டாம் என்று புலிகளிடம் கோரிக்கை விடுக்கவி ல்லை. இந்த மக்கள் மீது அப்போது இவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக் கிய தேசியக் கட்சியினருமே இடம்பெய ர்ந்த மக்களை அரசியலுக்கு மூலதனமா க்க முயற்சிப்பவர்கள். உண்மையிலேயே இம்மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை உண்டென்றால், அரசாங்கத்தின் மீள்குடி யேற்றச் செயற்பாடுகளுக்குக் கைகொடுத்து உதவ வேண்டும்.

அதற்குச் சம்மதமில்லை யென்றால் உபத்திரவம் செய்யாமல் ஓரத் தில் ஒதுங்கியிருப்பதே நல்லது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk