செலான் வங்கியானது 2009 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப் பகுதியில் ரூபா 12.7
பில்லியன் அந்நியச் செலாவணியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. வங்கிகள், பணப்
பரிமாற்று இல்லங்கள் போன்ற நிதி நிறுவனங்கள் ஊடான மணி கிராம், எக்ஸ்பிரஸ் மணி
யிnstant விash, ஷிதிணிகிதி, ஷிpலீலீனீ விash, ரிz ஞிலீசீit திபிகீ பிast ஞிலீசீit,
ஷிதீயிபிஹி போன்ற பணப்பரிமாற்றல் சேவைகள் இந்த அடைவுக்கு பங்களிப்பு செய்துள்ளன.
புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள செலான் வங்கி மீது வெளிநாடுகளில் வாழும்,
தொழில்புரியும் இலங்கையர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளவர்கள் கொண்டுள்ள
விஸ்வாசம் மற்றும் நம்பிக் கையின் காரணமாகவே அந்நியச் செலா வணியில் இந்தளவுக்கு
அதிகரிப்பு ஏற் பட்டுள்ளதாக செலான் வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட
குறிப்பிடுகின்றார்.
“வெளிநாடுகளில் உள்ள இலங்கை யர்கள் தாய் நாட்டிலிருக்கும் தமது
அன்புக்குரியவர்களுக்கு வசதியான முறையில் செலாவணியை அனுப்பி வைக்கும் நடவடிக்கைக்கு
உதவுவதை யிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவ துடன், அதனை கெளரவமாகவும் நினைக்
கின்றோம். உள்நாட்டு செலாவணி வர்த் தகத் துறையின் முன்னணி நிறுவனமான செலான் வங்கி,
இன்று உலகம் முழுவதுமுள்ள 170 நாடுகளையும் நிலப் புரப்புகளையும் இணைத்துக்கொண்டுள்
ளதுடன், சுமார் 128,000 இற்கு மேற் பட்ட சேவை மையங்களையும் விஸ்த ரித்துள்ளது.
மத்திய கிழக்கு, அவுஸ்தி ரேலியா, ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் மற்றும்
உலகத்தின் ஏனைய பாகங்களில் உள்ள எமது விஸ்வாச மிக்க, அதிகரித்து வரும் வாடிக்கையா
ளர்களுக்கு சேவை செய்வதில் நாம் உண்மையிலேயே பெருமிதம் அடைகின் றோம்” என்றும்
செலான் வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.