யோஷித FCID இல்; நாமல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் | தினகரன்

யோஷித FCID இல்; நாமல் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

கடற்படையின் முன்னாள் லெப்டினனான யோஷித ராஜபக்‌ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
 
தெஹிவளையில் அமைக்கப்பட்டு வரும் சுகபோக வீடொன்று தொடர்பில், வாக்குமூலமொன்றை வழங்கும் பொருட்டு அவர் இன்று (10) அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் மற்றுமொரு புதவல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ, பாரிய நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
 
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, நேற்றைய தினம் (09)  கோத்தாபய ராஜபக்‌ஷ வாக்குமூலமொன்றை வழங்கும் பொருட்டு, பாரிய நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...