லக்கல போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பணி நீக்கம் | தினகரன்


லக்கல போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பணி நீக்கம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
ஆயுத களவு இடம்பெற்ற வேளையில், லக்கல பொலிஸ் நிலையத்தில் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்டும் லக்கல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் (Traffic OIC) பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
 
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கடமையில் இருந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) விசாரிக்கப்பட்டதோடு, அந்நால்வரினதும் பணி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த சம்பவ தினமான கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி, குறித்த அதிகாரியான மஹேஷ் பிரசங்க பொலிஸ் நிலையத்திற்குள் மதுபானம் கொண்டு வந்து, அருந்தியதாக தெரிவித்தே, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.ஜே. வீரசிங்கவின் பணிப்பின் பேரிலேயெ குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது காணாமல்போன T56 வகை துப்பாக்கி மற்றும் 5 ரிவோல்வர்கள் ஆகியன, குறித்த பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள வெல்லேவல பகுதியிலுள்ள சதகல விகாரையில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...