அரிசி,மா, பால்மா உட்பட ஐவகை பண்டங்களுக்கு வரிவிலக்கு | தினகரன்

அரிசி,மா, பால்மா உட்பட ஐவகை பண்டங்களுக்கு வரிவிலக்கு

அதிகரிக்கப்பட்ட வற் வரி (11 வீதத்தில் இருந்து 15 வீதமாக) நேற்று (02) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், அரிசி, கோதுமை மா, பால்மா, மருந்து மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் என்பவற்றுக்கு குறித்த வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்துக்கும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி மற்றும் மருத்துவ பொருட்கள் விடயத்தில் வரி அமுல் செய்யப்பட மாட்டாது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 


Add new comment

Or log in with...