இலங்கைக்கு 150 கோடி டொலர் கடன்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இலங்கைக்கு, 1.5 பில்லியன் டொலர் (150 கோடி டொலர் /ரூபா 21,750 கோடி) கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.
 
குறித்த கடன் உதவி தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறும் சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபையின் அங்கீகாரம் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த கடன் உதவிக்கான அங்கீகாரம் கிடைக்குமிடத்து, 650 மில்லியன் டொலர் மேலதிக ஊக்குவிப்பு கடனாக இலங்கை பெற்றுக்கொள்ளும் என்பதோடு, இதன் மூலம் மொத்தமாக 2.15 பில்லியன் டொலர்கள் கடன் உதவி பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...