18 கரட் தங்கத்தில் கழிப்பறை | தினகரன்


18 கரட் தங்கத்தில் கழிப்பறை

நியூயோர்க்கிலுள்ள கூகன்ஹய்ம் அருங்காட்சியகத்தில் 18 கரட் தங்கத்தில் கழிப்பறை ஒன்று நிறுவப்படவுள்ளது.

இதனை இத்தாலியைச் சேர்ந்த மொரீஸியோ கேட்டலான் என்ற சிற்பக்கலைஞர் வடிவமைத்துள்ளார்.

இந்தக் கழிப்பறை சிற்பத்திற்கு ”அமெரிக்கா” எனப் பெயரிட்டுள்ள அவர், பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடையாளமாக இது உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். "அமெரிக்கா" காட்சிப் பொருளாகவும் பயன்பாட்டு இடமாகவும் அருங்காட்சியகத்தில் இருக்கும்.

இந்தக் கழிப்பறைச் சிற்பத்தைப் பாதுகாக்க முழுநேர பாதுகாவலர் நியமிக்கப்பட உள்ளார்.

உலகில் பல நாடுகளில் கழிப்பறை வசதியின்றி பல இலட்சம் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இவர்கள் தங்கத்தில் கழிப்பறை செய்து காட்சிக்கு வைத்து கடுப்பேற்றுகிறார்கள்.


Add new comment

Or log in with...