220 கிலோ கஞ்சாவுடன் கார்; பொலிஸாரிடமிருந்த தப்ப முயற்சி

RSM
 
சொகுசு கார் ஒன்றை மடக்கிப் பிடித்த நவகத்தேகம பொலிஸார் அதிலிருந்த சுமார் 220 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளதுடன் காரில் பயணித்த இருவரையும் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். 
 
 
இன்று (26) காலை நவகத்தேகம வன்னிஅமுனகொலே எனும் பிரதேசத்தில் வைத்தே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12152","attributes":{"alt":"","class":"media-image","height":"378","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி குறித்த கஞ்சா பொதிகளை எடுத்துச் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் பயணித்த கார், சாலியவெவ பிரதேசத்தில் வைத்து சாலியவெவ பொலிஸார் நிறுத்துமாறு சைகை காட்டியும் நிறுத்தாது பயணித்துள்ளது
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12153","attributes":{"alt":"","class":"media-image","height":"378","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
பின்னர், இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நவகத்தேகம பொலிஸாரால், பிரதேச மக்களுடன் இணைந்து கார் மடக்கிப் பிடிக்கபட்டுள்ளது.
 
இதன்போது, குறித்த காரை மடக்கிப் பிடிப்பதற்கு பொலிஸார் பலத்த சிரமங்களை எதிர்நோக்கயதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12154","attributes":{"alt":"","class":"media-image","height":"378","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
எனினும் குறித்த காரில் பயணித்த இருவரும் அவ்விடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதோடு, பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த காரிலிருந்து சிறு சிறு பொதிகளாக்கப்பட்ட சுமார் 220 கிலோ கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் நான்கு கோடியளவில் இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நவகத்தேகம பொலிஸார் அவர்களை ஆனமடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
 

Add new comment

Or log in with...