களனி பல்கலைக்கு ஒரு வாரம் பூட்டு

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
வயிற்றுவலி, வாந்திபேதி போன்ற அறிகுறிகளால், சுமார் 76 மாணவர்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழகத்தை எதிர்வரும் மே 04 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாணவர் நடவடிக்கை பணிப்பாளர், டொக்டர் சாமிந்த அபேசிங்க தெரிவித்தார்.
 
குறித்த அசாதாரண நிலைக்கு காரணம், உணவா அல்லது குடிநீரா அல்லது வேறேதும் காரணங்களாக இருக்குமா எனும் சந்தேகத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக குடிநீர் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், இன்று (26) மாலை குறித்த அறிக்கை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
 
ஆயினும் ராகம மருத்துவ பீடம் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...