நடிகர் ரஜினிக்கு 'பத்ம' விருது | தினகரன்

நடிகர் ரஜினிக்கு 'பத்ம' விருது

குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்த 112 பேர் நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும் 51 பேருக்கு மற்ற பத்ம விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட மீதமுள்ள 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் நடிகர் ரஜினிகாந்த், புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளும், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் குடியரசுத் தலைவர் வழங்கினார். 


Add new comment

Or log in with...