மாகாணசபை உறுப்பினர்களால் யாழ் செயலகம் முற்றுகை | தினகரன்

மாகாணசபை உறுப்பினர்களால் யாழ் செயலகம் முற்றுகை

RSM
 
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருடைய அலுவலகம், வடமாகாண சபை உறுப்பினர்களால் இன்று (11) முற்றுகையிடப்பட்டது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11996","attributes":{"alt":"","class":"media-image","height":"476","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நிலஅளவை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துமாறு கோரியே, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. 
 
வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், விந்தன் கனகரத்தினம் ஆகியோருடன் காணி உரிமையாளர்களும் இம்முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். 
 
நிலஅளவை பணிகளை முழுமையாக நிறுத்துவதற்கு மேலிடத்தில் கலந்துரையாடி மாவட்டச் செயலாளர் உறுதிமொழி வழங்கும் வரையில் இந்த முற்றுகைப் போராட்டம் தொடரும் என உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
 
 
பிரதான வாசல் கதவை பூட்டி, மாவட்டச் செயலாளரை யாரும் சந்திக்க முடியாத வகையிலும், அவர் அலுவலகத்திலிருந்து வெளியேற முடியாதவகையிலும் குறித்த முற்றுகை போராட்டம் இடம்பெற்ற போதிலும், அரச அதிபர் மாற்றுப் பாதையின் ஊடாக வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
(பாறுக் ஷிஹான்)

Add new comment

Or log in with...