இன்று மாலைக்குள் நிலைமை சீர் | தினகரன்


இன்று மாலைக்குள் நிலைமை சீர்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
பேலியகொடை ரயில் கடவையில் கொள்கலன் (Container) ஒன்று விபத்துக்குள்ளானதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட சிக்கல் இன்று (08) மாலைக்குள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
களனி - பியகம வீதியில் கறுப்பு பாலத்தில், குறித்த கொள்கலன் தாங்கிய லொறி ஒன்று இன்று (08) காலை மோதியதன் காரணமாக, பிரதான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
 
இதன் காரணமாக அலுவலக பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதோடு, பல மணி நேரம் ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...