அத்துமீறி நுழைந்த 04 இந்திய மீனவர்கள் கைது | தினகரன்

அத்துமீறி நுழைந்த 04 இந்திய மீனவர்கள் கைது

அத்து மீறி இலங்கைக் கடற் பரப்பில் மீன் பிடித்த மேலும் 04 இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

வடக்கில் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களது படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 தமிழக மீனவர்களுக்கான தடுப்புக் காவல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய(05) தினம் மன்னார் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிபதி இவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது. இவர்களில் 38 பேர் வவுனியாவில் சிறையிலடைக்கப்பட்டதுடன் மேலும் ஆறு சிறுவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று (05) கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர் நால்வரும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருக்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழ் நாட்டின் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இவர்களது படகுகள் மீன் பிடி உபகரணங்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். (ஸ) 

 


Add new comment

Or log in with...