சாவகச்சேரி தற்கொலை அங்கி தொடர்பில் ஒருவர் கைது | தினகரன்

சாவகச்சேரி தற்கொலை அங்கி தொடர்பில் ஒருவர் கைது

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை கைப்பற்றிய சம்பவம் தொடர்பில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
எட்வட் ஜூலியன் எனப்படும் குறித்த சந்தேகநபரை அக்கராயன்குளம் பதிதியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க்கது.
 

Add new comment

Or log in with...