தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு | தினகரன்

தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரவன்புலவு பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி ஒன்று உள்ளிட்ட வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அதன் அடிப்படையில் பின்வரும் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
1. தற்கொலை அங்கி - 01
2. கிளைமோர் குண்டு - 04
3. TNT வெடிமருந்து அடங்கிய 03 பார்சல்கள் - 12Kg
4. 9mm துப்பாக்கி ரவை பைக்கற்றுகள் 02 - 100 ரவைகள்
5. கிளைமோர் வெடிகுண்டுக்கான மின்கலங்கள் - 02
 
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே குறித்த வீட்டை சோதனைக்குள்ளப்பட்டு மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த வீட்டின் உரிமையாளரான 31 வயது நபர், அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருப்பதாக தெரிவித்த பொலிஸார், குறித்த நபரை தேடும் பணயில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
மேலும், குறித்த வெடிபொருட்கள் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டவை என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பொலிஸார் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add new comment

Or log in with...