மதக்கலவரம் நடந்த மியன்மார் மாநிலத்தின் அவசரகாலம் நீக்கம் | தினகரன்

மதக்கலவரம் நடந்த மியன்மார் மாநிலத்தின் அவசரகாலம் நீக்கம்

மியன்மாரில் பெளத்தர்கள் மற்றும் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு இடையில் கலவரம் இடம்பெற்ற பதற்றம் கொண்ட ரகினே மாநிலத்தின் அவசரகால நிலையை ஜனாதிபதி தான் சைன் நீக்கியுள்ளார். தனது பதவிக்காலம் முடிந்து வெளியேற சில மணி நேரத்திற்கு முன்னரே ஜனாதிபதி நேற்று இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆங் சான் சூக்கியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி இன்று அரச பொறுப்பை கையேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கலவரம் வெடித்த ரகினே மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறவில்லை. எனினும் மியன்மாரின் 1.1 மில்லியன் ரொஹிங்கியா முஸ்லிம்கள் நாடற்றவர்களாக ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

“ரகினே மாநிலத்தில் மக்கள் உயிர்வாழ மற்றும் சொத்துகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ரகினே மாநில அரசு உறுதிசெய்துள்ளது” என்று தைன் சைன் கையொப்பமிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதக்கலவரம் காரணமாக பெரும்பாலான ரொஹிங்கியா முஸ்லிம்கள் வீடுகளை இழந்து தொடர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.


Add new comment

Or log in with...