நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை | தினகரன்


நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை

நுவரெலியா பிரதேசத்தில் இன்று (28) காலை பெய்த மழையின்போது...
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (28) மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
 
வடக்கும், வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"11595","attributes":{"alt":"","class":"media-image","height":"422","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]

நுவரெலியாவில் இன்று (27) பெய்த மழை

இதேவேளை, நேற்று (27) முதல், இலங்கையின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகின்றதோடு, இன்று காலை வேளையில் நாட்டின் மத்திய மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.
 
தற்போது நிகழும் வரடசியான காலநிலையில், கடந்த சில நாட்களாக சூரியன், இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளில் உச்சம் கொடுத்து வந்ததோடு, நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள நீர் நிலைகளின் நீர் மட்டம் பாரிய அளவில் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் மழைக்காக விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Add new comment

Or log in with...