ஒரே குடும்பத்தின் மூவருக்கு மரண தண்டனை | தினகரன்

ஒரே குடும்பத்தின் மூவருக்கு மரண தண்டனை

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
நுவரெலியா உயர் நீதிமன்றத்தினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
நோட்டன்பிரிஜ், அலுஓய பிரதேசத்தில், ஏ.ஜி. செல்லையா என்பவரை கொலை செய்து, அவரது மகளை குகை ஒன்றிற்குள் கடத்திச் சென்று கற்பழித்த குற்றச்சாட்டுக்குள்ளான குறித்த மூவருக்குமே நுவரெலியா உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
ஐ. திசேரா கமலதாஸ் (35), ஐ. மஹிந்தகுமார் (32), ஐ. மோகன்ராஜ் (24) ஆகியோருக்கு மரண தண்டனை விதிப்பதாக நுவரெலியா உயர் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமசந்திர தீர்ப்பளித்தார்.
 
2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், தண்டனைக்குள்ளப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆவார்கள்.
 

Add new comment

Or log in with...