சிறுமிக்கு சூடு; விளக்கமறியலில் தந்தை, வளர்ப்புத்தாய் | தினகரன்

சிறுமிக்கு சூடு; விளக்கமறியலில் தந்தை, வளர்ப்புத்தாய்

Rizwan Segu Mohideen
 
கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையையும், வளர்ப்பு தாயாரையும் மார்ச் 28 வரை (14 நாட்கள்) விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தையை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
 
காத்தான்குடி 06ம் குறிச்சி பதுறியா வீதியில் வசிக்கும் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் 10வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால்  சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11231","attributes":{"alt":"","class":"media-image","height":"443","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இது தொடர்பான வழக்கு விசாரனை இன்று 14 திங்கட்கிழமை பிற்பகல் 3.10 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இடம்பெற்றது.
 
இதன் போது சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் இருவருக்கும் எதிர்வரும் 28ம் திகதி வரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியின் அண்ணனை மட்டக்களப்பு நீதிமன்ற சிறுவர் பிரிவுக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
 
இதேவேளை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த 10 வயது சிறுமி தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் இன்று (14) மதியம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
 
மேற்படி கலந்துரையாடலில் குறித்த சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு சிறுமியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
(காத்தான்குடி விஷேட நிருபர் - பளுல்லாஹ் பர்ஹான்)

Add new comment

Or log in with...