ஐவரை வேனுக்குள் தீ மூட்டிய சம்பவம்; ஐந்து சந்தேக நபர்கள் கைது | தினகரன்

ஐவரை வேனுக்குள் தீ மூட்டிய சம்பவம்; ஐந்து சந்தேக நபர்கள் கைது

தங்கொடுவ பகுதியில் எரியூட்டப்பட்ட வேனில் இருந்து கருகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பம், கொடுக்கல் வாங்கலினால் ஏற்பட்ட முரண்பாட்டினால் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்

இச்சம்பவம் தொடர்பில் ஐவரை கைது செய்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் ஐவரையும் கொலை செய்த பின்னர் சடலங்களை வேனுக்குள் வைத்து சந்தேக நபர்கள் எரியூட்டியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வான் ஒன்றிலிருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டன.

புஜ்ஜம்பொல - இரமெதகம வீதியில் கொஸ்ஹேன வத்த என்ற இடத்தில் இந்த வான் மீட்கப்பட்டது. இந்தவேனுக்குள் அடையாளம் காணமுடியாதவாறு ஐந்து சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன.

இவர்கள் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாராந்த சந்தையொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் இப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எரிந்த வானிலிருந்து கூரிய கத்தி போன்ற ஆயுதம் ஒன்றும் மூன்று கையடக்கத் தொலைபேசிகளும்கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...