கழுகு சித்திரவதை கொலை; இருவர் கைது | தினகரன்


கழுகு சித்திரவதை கொலை; இருவர் கைது

காலி, பம்பகல பாலத்திற்கு அருகில் கழுகொன்றை உயிருடன் பிடித்து அதன் சிறகுகளை அகற்றி, கால்களை வெட்டி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் தொடர்பில் கைதான இருவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் இது குறித்த புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
வனவிலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், நேற்றிரவு (09) கந்துருதுவ பிரதேசத்தில் வைத்து, குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...