மோட்டார் சைக்கிளில் வந்து மற்றுமொரு கொலை | தினகரன்

மோட்டார் சைக்கிளில் வந்து மற்றுமொரு கொலை

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில், வர்த்தகர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10952","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இன்று (04) கொச்சிக்கடை, மடம்பல்லேவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழந்தவர் மண் ஏற்றும் வியாபாரத்தை மேற்கொண்டுவந்த நிலந்த சம்பிக என்பவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10953","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த வர்த்தகரை பின்தொடர்ந்து வந்த குறித்த நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10954","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த கொலை முயற்சி இடம்பெற்றிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இதேவேளை நேற்றைய தினம் (03) இராஜகிரிய, ஒபேசேகரபுரவில் இவ்வாறானதொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்று அதில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...