பாரத லக்‌ஸ்மன் கொலை சந்தேகநபர் மீது சூடு

பதிப்பு 02
குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் கொழும்பு உயர் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற பஸ்ஸின் மீது, தெமட்டகொட பேஸ்லைன் - மாளிகாவத்தை வீதி சந்தியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கித்த தாக்குதலால், வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான தெமட்டகொட சமிந்தவின் வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிதாரிகள், கறுப்பு நிற ஹைப்ரிட் கார் ஒன்றில் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

பதிப்பு 01
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலையுடன் தொடர்புற்ற சந்தேகநபர்கள் பயணித்த சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
 
இன்று (02) மாளிகாவத்தையில் வைத்து இடம்பெற்ற இச்சம்பவத்தில், நால்வருக்கு காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த சந்தேகநபர்கள் பாரத லக்‌ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரின் கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதில் தெமட்டகொட சமிந்த என்பவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
துப்பாக்கிதாரிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 

භාරත ලක්ෂ්මන් ප්‍රේමචන්ද්‍ර මහතා ඇතුළු සිව්දෙනකු ඝාතනය කිරීමේ සැකකරුවන් කොළඹ මහාධිකරණයේ නඩුව අවසානයේ වැලිකඩ බන්ධනාගාරයට රැගෙන ගිය බසයට දෙමටගොඩ සමන්තා  සිනමා හල සමීපයේ දී වෙඩි තබා ඇතැයි පොලිසිය කියයි.

නඩුවේ තුන්වන සැකකාර චමින්දගේ  බඩට වෙඩි වැදී කොළඹ ජාතික රෝහලට ඇතුළු කළ බව පොලිසිය පවසයි. තුවක්කුකරුවන් කළු හයිබ්‍රිඩ් කාරයකින් පැමිණ ඇතැයි ද පොලිසිය පවසයි. 


Add new comment

Or log in with...