பசளை, கிழங்கு, வெங்காய விலைகள் மாற்றம்? | தினகரன்


பசளை, கிழங்கு, வெங்காய விலைகள் மாற்றம்?

உடனடியாக அமுலாகும் வகையில், 50 கிலோ கிராம் பசளையின் விலையை ரூபா 2,500 இற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 
தற்போது சந்தையில் விற்கப்படும் 50 கிலோ கிராம் பசளையின் விலை ரூபா 3000 இலிருந்து ரூபா 3,500 இற்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, நிதியமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த வரி அதிகரிப்பை இன்று (29) நள்ளிரவு முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...