பேஸ்புக்கில் புதிய உணர்வு பட்டன்கள் | தினகரன்


பேஸ்புக்கில் புதிய உணர்வு பட்டன்கள்

பேஸ்புக்கில் முன்பு இருந்த லைக் (Like) பட்டனுக்கு பதிலாக தற்போது புதிய வகையான பொத்தான்கள் இணைக்கப்பட்டுள்ளன. உணர்வுகளை வெளிக்காட்டும் இப்பொத்தான்கள் Reaction Buttons என்று அழைக்கப்படுகின்றன. இவை ஏற்கனவே இருந்தLike பொத்தானுடன் உடன் இணைந்து அன்பு/ காதல் (Love), சிரிப்பு (Ha Ha), ஆச்சரியம் (Wow), துக்கம் (Sad), கோபம் (Angry) எனும் ஐந்து மேலதிக உணர்வுகளை வெளிக்கொணர்வதாக அமைகின்றன.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10813","attributes":{"alt":"","class":"media-image","height":"213","typeof":"foaf:Image","width":"673"}}]]

'நீங்கள் எப்போதும், ஒரே விதமான உணர்வை வெளிக்கொணர்வதில்லை, பலரும் விருப்பமில்லை (Dislike) பொத்தானை கேட்டு நின்ற போதிலும், அவர்கள் உண்மையில் உங்கள் இடுகையை விரும்பவில்லை என்று கூற முடியாது. அவர்கள் பல்வேறு உணர்வுகளையே வெளிக்காட்ட விரும்புகின்றனர்" என பேஸ்புக் நிறுவனர் மார்க், இது குறித்து தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த, Profile புகைப்படத்திற்கு பதிலான வீடியோ புரபைல் பகுதியும் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதோடு, Featured Photos எனப்படும் நீங்கள் விரும்பும் முக்கிய நிகழ்வுகளை சித்தரிக்கும் 5 படங்களை, Profile இல் இணைக்கும் வசதி என பல்வேறு வசதிகள் பேஸ்புக்கில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...