மொபைல் போன் ஆக மாறும் கணனி

தொலைபேசி அழைப்பை இலகுவாக மேற்கொள்ள கைக்கு அடக்கமாக தயாரிக்கப்பட்டதே மொபைல் போன்களாகும். இவை தற்போது பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றமடைந்துள்ளன. இன்று பலர் மொபைல் போனில் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் அதில் காணப்படும் இதர சேவைகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மொபைல்போன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு அப்ளிகேசன்கள், செய்திப் பரிமாற்ற சேவைகள், இணையத்தள சேவைகள், படங்கள், பாடல்கள், வழி காட்டும் வரைபடங்கள் என பல்வேறு இதர சேவைகளை வழங்குகின்றன. அதுபோன்றே அதிலுள்ள விளையாட்டுகள் மூலம் சிறுவர்கள் கையிலும் அது உலா வருகின்றது.

இவ்வாறு உங்கள் மொபைல் போன் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பை எடுக்க முயற்சி செய்கையில் Battery Low என காலை வாரிவிடுகிறது. ஆம் குறிப்பாக மொபைல் போன்கள் அதன் வடிவமைப்பு, கைக்கு அடக்கமான அளவு என்பவற்றின் அடிப்படையில் அதன் மின்கலம் மிகவும் சிறியதாகவே அமைக்கப்படுகின்றது. இதனால் அதில் சேமிக்கப்படும் மின்சாரத்தின் அளவும் சிறியதாகவே காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினையை சமாளிக்க ஒரு வழியை சொல்லித்தருகிறது ப்ளு ஸ்டக்ஸ் (Blue Stacks) மென்பொருள். இது உங்கள் மொபைல் போனுக்கு ஓய்வளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். கணனிகளில் இதனை நிறுவுவதன் மூலம், நீங்கள் கணனியின் முன் உட்கார்ந்திருக்கும் நேரத்தில் உங்கள் மொபைல் போனில் மேற்கொள்கின்ற பெரும்பாலான இதர சேவைகள் மூலம் பெற்றுக்கொள்ளுகின்ற சேவைகளை பெற்றுக்கொள்ள இது வழி வகுக்கின்றது.

இலவசமாக கிடைக்கும் இம்மென்பொருளை இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

முற்றிலும் மொபைல் போன் திரை போன்று காட்சியளிக்கும் இம்மென்பொருளில் உங்கள் ஜிமெயில் முகவரியை வழங்கி செயற்படுத்துங்கள். (இதற்கென தனியான மின்னஞ்சல் ஒன்றை வழங்குவது சிறந்தது) பின்னர் உங்களுக்குத் தேவையான அப்ளிகேசன்கள், விளையாட்டுகள் என பல்வேறு மென்பொருட்களை இதில் நிறுவிக்கொள்ளுங்கள்.

விளையாட்டுப் பிரியர்களுக்கு இம்மென்பொருள் கடவுள் வழங்கிய வரம் என்றே கூறவேண்டும். எந்த நேரமும் கையில் மொபைல் போனை வைத்துக்கொண்டு விளையாடுவதன் மூலம் அடிக்கடி தங்களது மொபைல் போனின் மின்கலத்தை தீர்த்துவிட்டு ஏதோ ஒரு ப்ளக் பொயின்ட் (Plug Point) அருகில் அதனை சார்ஜ் செய்தவாறு விளையாடும் உங்களுக்கு ஒரு பெரிய ஆறுதலை வழங்குகிறது இம்மென்பொருள்.

அது மட்டுமல்லாமல் மொபைல் போனின் சிறிய திரையில் நீங்கள் பார்த்தவற்றை பெரிய திரையில் பிரமாண்டமாகப் பார்க்கும் வசதியையும் இம்மென்பொருள் வழங்குகின்றது.

இக்குறிப்பிட்ட சேவையை வழங்குவதற்கு இணையத்தளத்தில் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. You Wave, Geny Motion, Andy என்பவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். ஆனால் இவை அனைத்தையும் விட இந்த Blue Stacks மென்பொருள் பல்வேறு வகையில் முன்னிற்கிறது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10810","attributes":{"alt":"","class":"media-image","height":"424","typeof":"foaf:Image","width":"673"}}]]

அதாவது, இம்மென்பொருட்கள், ஒரு மொபைல் போன்று செயற்பட்டு, அதில் பல்வேறு மென்பொருட்களை தரவிறக்கி பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில மொபைல் போன்களில், ஒரு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியாது என்பது போன்றே இவற்றிலும். ஆயினும் ப்ளு ஸ்டெக் மென்பொருள் இவ்வாறான பெரும்பாலான அப்ளிகேசன்களுக்கு பொருந்துதல், அதிகமான விளையாட்டுகளுக்கு ஈடுகொடுக்கும் தன்மை, கமெரா, கிரபிக்ஸ், தொடுதிரை, அப்ளிகேசன் பரிசீலித்தல், தொலைக்காட்சி வழங்கல் போன்றவற்றின் அடிப்படையில் ஏனைய மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் இம்மென்பொருளே அதிக செயற்றிறன் மிக்கதாக காணப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் மேற்குறிப்பிட்ட ஏனைய மென்பொருட்களிலும் பார்க்க மிக சிறிய அளவான இது 185 மெகா பைற் அளவில் கிடைக்கிறது. www.bluestacks.com எனும் இணையத்தளத்திற்கு சென்று முற்றிலும் இலவசமாக இம்மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதோடு இது முற்று முழுதாக அன்ரொய்ட் அப்ளிகேசன்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கான ஒரு ஊடகமாகும். ஆயினும் எந்த ஒரு கணனியிலும் இதனை நிறுவிக்கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10811","attributes":{"alt":"","class":"media-image","height":"396","typeof":"foaf:Image","width":"673"}}]]

அது மட்டுமல்லாது ஸ்மார்ட் போன் உலகில், ஸ்மார்ட் போன் இன்றி வாடும் உங்கள் நண்பருக்கு, ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் அனுபவத்தையும் இது வழங்குகின்றது.

இனி என்ன உங்கள் கணனியில் வட்ஸ்அப் முதல் கண்டி கிரஷ் வரை அனைத்தையும் டவுண்லோட் செய்யுங்கள்.

 (றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து) 

 தினகரன் செயலியை பதிவிறக்கம்  செய்ய  mmms.lk/lakehouse/Thinakaran.html 


Add new comment

Or log in with...