ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு? | தினகரன்

ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு?

 சென்னையில் ரஜினிக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் திகதி ராணா படப்பிடிப்பு தொடக்க விழா தினத்தன்று, ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு முறை அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மே 13-ம் திகதி மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறுநீரகப் பாதிப்புக்குரிய டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக மே 27-ம் திகதி சிங்கப்பூருக்கு குடும்பத்தினருடன் பயணமானார் ரஜினி.

சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகப் பாதிப்புக்குரிய டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு முழுவதும் குணமான ரஜினி வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். தற்போது கபாலி, ஷங்கரின் 2.0 என இரு படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஜினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 


Add new comment

Or log in with...