ஆற்றில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி | தினகரன்

ஆற்றில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

கிண்ணியா, அண்ணல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
 
இன்று (22) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மீன் வாங்குவதற்கு தாயிடம் பணம் பெற்றுக் கொண்டு இச் சிறுவன் தனது நண்பன் ஒருவனுடன் கிண்ணியா கட்டையாற்று பாலத்தடி பிரதேசத்துக்கு வந்துள்ளார்.
 
மீன் வாங்காமல் இருவரும் கட்டையாற்றில் குளித்திருக்கிறார்கள். அப்போது, பலமான நீரோட்டம் ஏற்பட்டதனால் குறித்த சிறுவனை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.  
 
பிரதேசவாசிகள் உடனடியாக குறித்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார்.
 
தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் சப்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(கிண்ணியா மத்திய நிருபர் - எஸ். கியாஸ்)

Add new comment

Or log in with...