கைப்பையை திருடிய பெண்; சம்பவம் CCTV யில் | தினகரன்

கைப்பையை திருடிய பெண்; சம்பவம் CCTV யில்

கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து,  வாடிக்கையாளர் ஒருவரது கைப் பையை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10658","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 447px;","typeof":"foaf:Image","width":"758"}}]]

ஹட்டன் நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேகநபர், அருகில் நின்று கொண்டிருந்த மற்றமொரு வாடிக்கையாளரின் பையை திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10659","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 447px;","typeof":"foaf:Image","width":"758"}}]]

குறித்த காட்சிகள், அவ்வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10660","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 446px;","typeof":"foaf:Image","width":"759"}}]]

இதனை பயன்படுத்தி குறித்த பெண்ணை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இது தொடர்பில் பொதுமக்களின் உதவியையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10661","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 448px;","typeof":"foaf:Image","width":"756"}}]]

கைப்பை உரிமையாளர், இது குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10662","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 448px;","typeof":"foaf:Image","width":"756"}}]]

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10663","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 447px;","typeof":"foaf:Image","width":"758"}}]]

 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10664","attributes":{"alt":"","class":"media-image","height":"480","style":"width: 673px; height: 449px;","typeof":"foaf:Image","width":"720"}}]]

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)


Add new comment

Or log in with...