ஒத்துழைப்பை மேலோங்க ஆஸ்திரிய ஜனாதிபதியுடன் இணக்கம்

எதிர்காலத்தில் மிகவும் நட்புறவான நாடுகளாக செயற்பட்டு இரு நாடுகளதும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கு இலங்கை – ஆஸ்திரியா நாட்டுத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

ஆஸ்திரியாவில் இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஆஸ்திரிய ஜனாதிபதி Heins Fischer இற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) பிற்பகல் இடம்பெற்றதுடன் அதன்போது இரண்டு நாடுகளின் தலைவர்களுக்குமிடையே இவ் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ஆஸ்திரிய அரசினால் விடுக்கப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பு இதுவாகும் என்பதுடன் நேற்றைய தினம் ஆஸ்திரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சியிலும் பங்குபற்றினார்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10639","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"font-size: 13.008px; line-height: 20.0063px; width: 673px; height: 592px;","typeof":"foaf:Image","width":"572"}}]]

நேற்று பிற்பகல் ஆஸ்திரிய ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு, ஆஸ்திரிய ஜனாதிபதி Heins Fischer இனால் பாரிய வரவேற்பு வழங்கப்பட்டது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10640","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 270px;","typeof":"foaf:Image","width":"1256"}}]]

இரு நாடுகளினதும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இப்பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு வைபவத்தின் பின்னர் இரு நாட்டு தலைவர்களுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10642","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 500px;","typeof":"foaf:Image","width":"677"}}]]

இரண்டு நாடுகளுக்குமிடையே நிலவும் நட்புறவினை மேலும் விரிவுபடுத்துதல் தொடர்பாக அரச தலைவர்களுக்கிடையே விரிவாக கலந்துரையாடப்பட்டது.

26 வருட பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றி நாட்டில் சகவாழ்வினையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மூலம் தடைபட்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து நட்புறவு நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பா ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதற்கும் GSP+ நிவாரணத்தை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆஸ்திரிய அரசாங்கம் தன்னாலான ஒத்துழைப்பை வழங்குவதாக ஆஸ்திரிய ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதன் பின்னர் இலங்கை – ஆஸ்திரிய அரச தலைவர்கள் ஒன்றிணைந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அரச தலைவர்கள் இரண்டு நாடுகளினதும் நட்புறவை மேலும் வலுவான முறையில் எதிர்காலத்தில் பேணிச் செல்வது இரண்டு நாடுகளினதும் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10643","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 673px; height: 419px;","typeof":"foaf:Image","width":"807"}}]]

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஸ்திரியாவின் தலைநகரிலுள்ள உலகப் பிரபல்யம் வாய்ந்த, வரலாற்று நூதனசாலைக்கும் சென்றிருந்தார்.

(படங்கள் சுதத் சில்வா)


Add new comment

Or log in with...